பூமி மீது சிறுகோள்கள் மோத வாய்ப்புள்ளதா? அப்படி மோதினால் அடுத்து என்ன நடக்கும்?

சந்திரயான் வெற்றிக்கு பிறகு மக்களுக்கும் மாணவர்களுக்கும் விண்வெளியின் மீது ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. பல சந்தேகங்களையும், குழப்பத்திற்கும் விடைதேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
சிறுகோள்
சிறுகோள்கூகுள்
Published on

சந்திரயான் வெற்றிக்குப் பிறகு மக்களுக்கும் மாணவர்களுக்கும் விண்வெளியின் மீது பெரும் ஈர்ப்பு வந்துள்ளது. பல சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் இணையத்தில் விடை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒன்றுதான்

சிறுகோள்கள்.

குறிப்பாக, ‘சிறுகோள்கள் பூமியின் மீது மோத வாய்ப்பு இருக்கிறதா? அப்படி மோதினால், பூமிக்கு பாதிப்பு ஏற்படுமா?’ என்பதே முதன்மையான கேள்வியாக உள்ளது. இதற்கு உரிய சிறு விளக்கத்தை பார்க்கலாம்...

சிறுகோள்கள் பூமியோடு மோதுமா?

பிரபஞ்சத்தில் பெரு வெடிப்பின் முடிவில் கோள்கள் உருவான போதே அதனுடன் சிறுகோள்கள், மணல்கள். தூசுமண்டலங்கள், சிறு கற்கள் போன்றவையும் உருவானது. நமது சூரிய குடும்பத்தில் சூரியனை மையமாக கொண்டு எட்டு கோள்கள் சுற்றி வருவதுடன் எண்ணெற்ற சிறுகோள் மற்றும் தூசுகள், சிறு கற்கள் ஆகியவையும் சுற்றிவருகின்றன.

இதில் சில சிறு கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிகழ்வும் உண்டு. சிறு கோள்கள் பல கிரகத்தில் மோதிக்கொள்ளும் நிகழ்வும் உண்டு. உதாரணத்திற்கு சந்திரனில் பல சிறுகோள்கள் மோதியதால் சந்திரனுடைய நிலப்பரப்பானது மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. ஆனால் பூமியை சிறுகோள்கள் தாக்குவது குறைவு.

ஒருவேளை சிறுகோள்கள் பூமியோடு மோதினால் என்ன நடக்கும்?

எந்த ஒரு object ஆக இருந்தாலும் அது பூமியின் வளிமண்டலத்தை கடக்கும் பொழுது எரிந்து சாம்பலாகதான் பூமியில் விழுகிறது. ஆனால் அது அளவில் சற்று பெரிதாக இருந்தால், முற்றிலும் எரிந்து முடிப்பதற்குள் பூமியில் விழுந்து அழிவை ஏற்படுத்தும். அதனால் சிறு கோள்கள் மோதினால் பூமிக்கு ஆபத்து இருப்பதாகவே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த ஆபத்தை சமாளிக்கவும் அவர்கள் முயற்சி செய்துகொண்டும் இருக்கின்றனர்.

சிறுகோள்
அறிவோம் அறிவியல் 7 | செவ்வாய் கிரகத்துடன் மோதி மோதிரம் ஆகப்போகுகிறதா அதன் சந்திரன்?

கிரகங்களும், அதனருகே உள்ள சிறுகோள்களும்...!

பூமிக்கு அருகில் 34,000 க்கும் மேற்பட்ட சிறுகோள்கள், 120க்கும் மேற்பட்ட வால்மீன்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே லட்சக்கணக்கான சிறுகோள்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறுகோள்கள் அனைத்தும் ஒரே போன்று இருப்பதில்லை, அதே நேரத்தில், இது சூரியனை சுற்றும் வேகமும், அதன் பாதைகளும் வெவ்வேறாக இருக்கும்.

இதில் சில சிறியவகை விண்கற்கள் பூமியில் விழும் போது எரிகற்களாக விழுகின்றது. அதே நேரத்தில் பெரிய விண்கற்களாக இருந்தால்....? அது அது முற்றிலும் எரியாமல் எரிபாறையாக புமியை தாக்கினால்...? பூமிக்கு அபாயம் இருக்கிறதல்லவா?.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்

சமீபத்தில் விண்கற்கள், சிறு கோள்கள் குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் பேசியபொழுது, "விண்கற்களிலிருந்து பூமியைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். சிறுகோள்களின் பூமியின் மீதான தாக்குதலுக்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரம் சிறுகோள்கள் நம்மை ஏவுகணைகள், துப்பாக்கிகள் அல்லது லேசர் கதிர்கள் போல வந்து தாக்கப் போவதில்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை தாக்கும் சிறுகோள்கள், வெறுமனே வந்து நம்மைத் தாக்கும். அதனாலேயே அது நமக்கு ஆபத்தாக முடியும்.

இன்றுள்ள சூழலில் சிறுகோள்களுக்கு எதிராக எந்த ஒரு நாட்டாலும் பூமியை பாதுகாக்க முடியாது. ஆகவே உலகிலுள்ள பல்வேறு நாடுகள் பூமியின் பாதுகாப்பிற்காக சேவை செய்ய வேண்டும். இதற்கு இந்தியா ஆர்வமாகவும், தயாராக உள்ளது” என்றுள்ளார்.

விண்கல் விழுந்த இடம்
விண்கல் விழுந்த இடம்

ஆராய்ச்சியாளர்கள் சிறுகோள்கள் பூமியை தாக்காதவாறு அதன் பாதையை மாற்றவும், பிரபஞ்சத்தில் விண்கலத்தின் மூலம் விண்கற்களை அழிக்கவும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் பூமிக்கு மிக அருகில் சென்ற பென்னு என்ற விண்கல்லிலிருந்து மாதிரியை சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகிறது நாசா.

முன்னதாக, 1908 ஜூன் 30ம் தேதி ஒரு சிறுகோள் ஒன்று ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள துங்குஸ்கா பகுதியில் விழுந்து 80 மில்லியன் மரங்களையும் சுமார் 2200 சதுர கிலோமீட்டர் காடுகளையும் அழித்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com