வாட்ஸ் அப்பில் என்னென்ன இல்லை?

வாட்ஸ் அப்பில் என்னென்ன இல்லை?
வாட்ஸ் அப்பில் என்னென்ன இல்லை?
Published on

இப்போது ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் இல்லை. அதில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்களும் இல்லை என்கிற நிலைமை வந்து விட்டது. கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதில் குரூப்களும் அதிகரிக்க தொடங்கி விட்டன. பழைய நண்பர்களுக்கு ஒரு குரூப், அலுவலக விஷயத்திற்காக ஒரு குரூப் என பல குரூப்களில் பலரும் தொடர்பில் இருப்பதால் செய்தி பரிமாற்றம் என்பது வாட்ஸ் ஆப்பில் மிக எளிமையானதாக மாறிவிட்டது. இருப்பினும் வாட்ஸ் ஆப்பில் சில அம்சங்கள் இல்லை என அதனை பயன்படுத்துவர்கள் குறை சொல்கிறார்கள்.

* ஃபேஸ்புக் மெசன்ஜர், வைபர், ஹைக் போன்ற ஆப்களில் காணப்படும் ஸ்டிக்கரை போன்று உரையாடல்களை சுவாரசியமானதாக மாற்றும் ஸ்டிக்கர்கள் வாட்ஸ் ஆப்பில் இல்லை.

*விசாட் போன்ற ஆப்களில் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதுவாகவே அழிந்துவிடும். இல்லையென்றால் எவ்வளவு நேரம் அந்த மெசேஜ் இருக்க வேண்டும் என நீங்கள் டைம் கூட செட் செய்து அனுப்பலாம். நீங்கள் நிர்ணயித்த டைம் முடிந்த பின் நீங்கள் அனுப்பிய மெசேஜ் அதுவாகவே அழிந்துவிடும். இந்த வசதி 'வாட்ஸ் ஆப்'பிலும் இருந்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.

* மற்ற சாட்டிங் ஆப்களில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளதைப் போன்று வேலட் வசதி வாட்ஸ்ஆப்பில் இல்லை.

• நீங்கள் டிரைவிங் அல்லது மீட்டிங்கில் இருக்கும்போது உங்களது பதிலை உடனடியாக டைப் செய்ய முடியாது. அந்த ரேத்தில் டிபால்டாக உள்ள மெசேஜ் தானாக ரிப்ளை கொடுக்கும் வசதி வாட்ஸ்அப்பில் இல்லை.

*லைன் போன்ற ஆப்களில் உங்களால் 1ஜிபி தரவு கொண்ட கோப்புகளை கூட எளிதாக அனுப்ப முடியும். ஆனால் வாட்ஸ் அப்பில் வெறும் 100 எம்பி தரவு கொண்ட கோப்புகளை மட்டுமே ஷேர் செய்ய முடியும்.

*மற்ற சாட்டிங் ஆப்களில் பிடிஎப் உள்ளிட்ட அனைத்து வகையான பைல்களையும் அனுப்ப முடியும். ஆனால் வாட்ஸ் ஆப்பில் பிடிஎப் பைல்களை மட்டுமே அனுப்ப முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com