ஸ்மார்ட்ஃபோன்களில் பிரபலமாகும் இ - சிம்கள்! eSIM என்றால் என்ன? பயன்கள் என்ன?

ஸ்மார்ட்ஃபோன்களில் அடுத்த முன்னேற்றமாக இ-சிம்கள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கியுள்ளன.
E SIM
E SIMPT
Published on

உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக மனிதனின் அத்தியாவசிய தேவையாக ஸ்மார்ட்ஃபோன்கள் மாறியுள்ளன. தற்போது அதில் அடுத்தகட்ட வளர்ச்சியாக இ-சிம் சேவையை ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன.

தற்போது ஸ்மார்ட்ஃபோனில் உள்ள சிம் கார்டுகள் வன்பொருள் வடிவில் உள்ளன. ஆனால் அதை ஸ்மார்ட்ஃபோன்களின் மதர் போர்டிலேயே மென்பொருள் வடிவில் பொருத்துவதே இ சிம் தொழில்நுட்பமாகும்.

எம்பெடட் சிம் என்பதன் சுருக்கமே இ சிம் எனப்படுகிறது. அந்தந்த தொலைபேசி நிறுவன சேவை மையங்களை அணுகுவது மூலம் ஒருவர் சாதாரண சிம்மிலிருந்து இ சிம்மிற்கு மாற்றிக்கொள்ள இயலும்.

இ சிம் பயன்பாடும் விரைவில் சாதாரண ஒன்றாக மாறும்!

இ சிம் வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனத்தின் சேவையிலிருந்து மற்றொரு நிறுவன சேவைக்கு மாறுவது மிகவும் எளிதாகும் என கூறப்படுகிறது. இ சிம் உள்ள ஸ்மார்ட்ஃபோனை கையில் கட்டியுள்ள ஸ்மார்ட் வாட்சுடன் இணைக்க முடியும். எனவே செல்லும் இடமெல்லாம் ஸ்மார்ட்ஃபோனை எடுத்துச்செல்லவேண்டியதில்லை. இதோடு ஒரே ஒரு ஸ்மார்ட்ஃபோனில் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் ஃபோன் எண்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் இதன் சிறப்பாகும்.

e SIM
e SIM

இதுதவிர ஸ்மார்ட்ஃபோன் திருடுப்போனாலும் சிம் கார்டை தனியே எடுக்கமுடியாது. இதனால் திருடப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களை தொழில்நுட்ப ரீதியாக பின்தொடர்ந்து அதை மீட்பதும் மிகவும் எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இ சிம் வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அதன் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் மின்னஞ்சலையும் அனுப்பிவருகிறார். கூறப்படுகிறது.

இ சிம் வசதியை பெறுவதற்கு தற்போதைக்கு அதிக செலவானாலும் வருங்காலங்களில் இது கணிசமாக குறையும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com