அறிவோம் அறிவியல் தொடரில் இதுவரை நாம் சூரி யகுடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றியும் அதன் தன்மை, அமைப்பு, அதன் நிலவுகள் பற்றி பார்த்து வந்தோம். இனி... சூரியமண்டலத்தைத்தாண்டி இருக்கும் கோள்கள், அதன் தன்மைகள் ஆகியவற்றைப்பற்றி பார்க்கலாம்.
முதலில்
எக்சோப்ளானட் என்றால் நமது சூரியகுடும்பம் அல்லாத மற்ற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கோள்கள்.
பொதுவாக கிரகங்கள் நீரால், தனிமங்களால், நெருப்பால், உலோகங்களால் அல்லது வாயுக்களால் அல்லது அனைத்தும் கலந்த கலவையால் என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த வகையில் எக்சோப்ளானட் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கின்றனர்.
நமது சூரிய குடும்பத்தை அடுத்து இருக்கும் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகையில் சில நட்சத்திரங்களில் கோள்கள் சுற்றி வருவதை கண்டறிந்தனர்.
இத்தகைய கோள்களை அளவீடு செய்வதன் மூலம் அதன் விட்டம், நிறைகளை வைத்து அந்த கிரகமானது நமது சூரியகுடும்பத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு கிரக அமைப்பை பெற்று இருக்கிறதா என ஆராய்வார்கள். இதில் விண்மீன் மண்டலத்தில் நட்சத்திரங்களை விட அதிகமான கிரகங்கள் உள்ளன.
அப்படி விண்வெளியில் இதுவரை 5,743 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் சிலவற்றிற்கு பெயரிட்டு அதனை ஆராய்ந்து வருகிறது நாசா. இப்படி கண்டுபிடிக்கப்பட்ட கோள்களை நமது சூரிய குடும்பத்துக் கோள்களுடன் ஒப்பீடு செய்து வருகின்றனர்.
அதன்படி,
நெப்டியூன் போன்ற கிரக அமைப்பை ஒத்து 1,961 கிரகங்களும்,
வியாழன் கிரகத்தைப் போன்று வாயுக்கள் நிரம்பிய கிரகங்களாக (Gas giant) 184 கிரகங்களும்
பூமியை ஒத்த கிரகங்கள் சுமார் 1,730 (super earth) கிரகங்களும்
205 terrestrial (நிலப்பரப்பு) கிரகங்களும்
என்னவகையென்றே தெரியாத நிலையில் 7 கிரகங்களும்
வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நமது சூரிய குடும்பத்திலிருந்து பல ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருப்பவை.
ஒரு ஒளி மண்டலம் என்பது சுமார் 5.88 டிரில்லியன் மைல்கள் அல்லது 9.46 டிரில்லியன் கிலோமீட்டர்களுக்குச் சமம். பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்ட ப்ராக்ஸிமா செண்டாரி பி என்ற கோள், 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. இந்த ப்ராக்ஸிமா செண்டாரி பி கோளானது பூமியை போன்று இருந்தாலும், இது சுற்றி வரும் நட்சத்திரம் மின் காந்த அலைகளை அதிகம் உமிழக்கூடிய ஒரு எரி நட்டத்திரம். இத்தகைய நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் கிரகங்களில் வளிமண்டலம் இருப்பது என்பது கேள்விக்குறியே... ஆகையால் ப்ராக்ஸிமா செண்டாரி பி கோள் பூமியைப்போன்று இருந்தாலும் அதில் வளிமண்டலம் இருக்காது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இத்தனை தொலைவில் இருக்கும் கிரகத்தை விஞ்ஞானிகள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும்... அதற்கும் விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
அதாவது விண்வெளியில் பிரத்யேக தொலைநோக்கிகளான ஜேம்ஸ் வெப், ஹபிள் போன்ற அதிநவீன தொலைநோக்கிகளின் உதவியால் பூமியிலிருந்து பல கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யும் பொழுது, சில நட்சத்திரங்கள், திடீரென்று மறையும் அல்லது மங்களாக தெரியும். காரணம், இப்படிப்பட்ட நட்டத்திரத்தை கோள்கள் சுற்றி வரும். அப்படி சுற்றும்பொழுது இப்படிபட்ட நிகழ்வு ஏற்படுகிறது. உடனடியாக அந்த கோள் என்ன என்பதை கண்டுபிடித்து அதை ஆராய்ச்சி செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.
பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த ஆராய்ச்சிகளில், விஞ்ஞானிகள் பல எக்ஸோ பிளானட்களை கண்டறிந்துள்ளனர். அப்படி விஞ்ஞானிகளின் முடிவில்லா தேடல்களுக்கு கிடைத்த பதில்களை, அதாவது எக்ஸோ பிளானட்ஸ்களை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இந்த கோளை விஞ்ஞானிகள் 2024ல் கண்டுபிடித்தனர். இந்த கோளின் நிறை 4.34 MJ. இது நமது சூரியகிரகத்தில் இருக்கும் வியாழன் கிரகத்தை ஒத்துஇருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும் இந்த கிரகத்தின் வெப்பநிலை பற்றியோ, வளிமண்டல மூலக்கூறுகள் பற்றியோ இன்னும் விஞ்ஞானிகள் தகவல்களை வெளியிடவில்லை ...
இது போன்றதொரு கிரகத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்...