சந்திரயான் 3 தரையிறங்கிய அந்த 14 நாட்கள்; நிலவில் நடந்தது என்ன?
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை அனுப்பியதை நாம் அறிவோம். சரியாக விண்வெளியில் 40 நாட்கள் அது பயணித்து, ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் பத்திரமாக தரையிறங்கி உலக சாதனையை படைத்தது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நான்காவது நாடாக நிலவில் சாப்ட்லேண்டர் திட்டத்தின்படி சந்திரயான் 3 நிலவின் தென் துருவப்பகுதியில் கால்பதித்தது. ஆகவே இஸ்ரோவின் இந்த சாதனையை கொண்டாடும் தினமாக மத்திய அரசு ஆகஸ்ட் 23-ஐ தேசிய விண்வெளி தினமாக அறிவித்தது.
இந்த நாளை நாம் கொண்டாடி வரும் வேளையில், சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், ப்ரக்யான் ரோவரின் பங்கு என்ன என்பதை பஞ்சாப்பில் உள்ள Indian Institute of science Education and Research ல் பேராசிரியராக பணியாற்றும் விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் நம்மிடையே விளக்கமாக பேசியுள்ளார்.
இதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.