பெங்களூரில் தண்ணீரைக் கொண்டு ராக்கெட்டுகள் ஏவும் போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நடத்திய தண்ணீர் மூலம் ராக்கெட் ஏவும் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 12 நாடுகளில் இருந்து 57 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். பிளாஸ்டிக் பாட்டிலை ராக்கெட் போல் வடிவமைத்து, தண்ணிரைக் கொண்டு அதனை நீண்ட தூரம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் போட்டி நடத்தப்பட்டது. மாணவர்களின் மத்தியில் விண்வெளி அறிவியல் ரீதியான ஆர்வத்தை வளர்ப்பதே இந்த போட்டியின் நோக்கம் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற போட்டிகளை இஸ்ரோ தரப்பினர் நடத்துவது மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கிறது என்று, போட்டியில் பங்கேற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.