காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் ஸ்மார்ட் ஸ்கார்ஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. வையர் (wair) என பெயர் வைக்கப்படிருக்கும் இந்த ஸ்கார்ஃபை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.
பொதுவாக வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களை எரிப்பதனால் உண்டாகும் புகையினால் அதிகமாக காற்று மாசுபடுகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்ள உருவாக்கப்பட்டதுதான் ஸ்மார்ட் ஸ்கார்ஃப்.
காற்று மாசுபடுதலில் இருந்து தற்காத்துக் கொள்ள உருவாக்கப்பட்டுள்ள இந்த wair ஸ்கார்ஃப், மொபைல் ஃபோனுடன் இணைந்து செயல்படுத்தும் வசதி கொண்டது. வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் அங்கு காற்றின் மாசு எவ்வளவு இருக்கும், ஸ்கார்ஃப் அணிய வேண்டுமா வேண்டாமா என்பதை வையர் உடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் போன் தனது அப்ளிகேஷன் மூலம் வழிகாட்டும் .
ஆண்கள் மற்றும் பெண்களுடைய வசதிக்கும் விருப்பத்திற்கு ஏற்ற வகையில பல நிறங்கள் மற்றும் வடிவங்களில் இந்த ஸ்கார்ஃப் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இந்த ஸ்கார்ஃப் இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.