ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வோடஃபோன் நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து, ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
அதன்படி வோடஃபோன் நிறுவனம் ரம்ஜான் மாத சலுகையை அளித்துள்ளது.
இது தற்போது வட மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 786 ரூபாய்க்கு, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 25 ஜிபி டே்டாவை வழங்குகிறது. மேலும், குறிப்பிட்ட வெளிநாடுகளுக்கு மட்டும் குறைந்த கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியில் உள்ள போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், அன்லமிட்டெட் தேசிய ரோமிங் மற்றும் 25 ஜிபி டேட்டா உள்ளிட்டவை ரூ.786க்கு வழங்கப்படுகிறது.
இதே போல் ராஜஸ்தானில் உள்ள பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 'வோடஃபோன் ஹோலி ரம்ஜான் பேக்' திட்டத்தின் கீழ் முழு டாக்டைம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு 0.14 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் 786 என்ற எண் கொண்ட வாடிக்கையாளர்களின் பிரீமியம் மொபைல் நம்பர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகிறது. இது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிடு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இதுபோன்ற பல்வேறு சலுகைகளை வோடஃபோன் வழங்குகிறது.