பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கூகுள் பிரிவு, ஆண்ட்ரய்டு வாடிக்கையாளர்களுக்கு, மொபைல் டேட்டாவை சேமிக்கும் வகையில் கூகுள் ட்ரைஆங்கிள் ஆப்பை (Google Triangle App) அறிமுகம் செய்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் டெஸ்ட்டிங் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ட்ரைஆங்கிள் ஆப், மொபைல் டேட்டா பயன்பாட்டினை சேமிப்பதற்கு மிகுந்த பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களில் டவுன்லோட் செய்து வைக்கப்பட்டிருக்கும் ஆப்ஸ்கள், தானாகவே டேட்டாவைப் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தி டேட்டாவை சேமிக்கும் வகையில் கூகுள் ட்ரைஆங்கிள் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கால நேரத்தில், அதாவது ஒரு 30 நிமிடத்திற்கு மட்டுமே டேட்டா பயன்படுத்தும் வகையிலும், மற்ற நேரங்களில் அந்த ஆப் டேட்டாவை தானாகவே பயன்படுத்துவதை முற்றிலும் தடுத்து நிறுத்தி, இதன் மூலம் ஏறத்தாழ 10 எம்பி டேட்டா வரை சேமிக்கலாம்.
தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டும் டவுன்லோட் செய்துகொள்ளும் வகையில் டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த ஆப், மற்ற நாடுகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.