இன்ஸ்டாகிராமில் பொய்யான பதிவு என நினைத்தால் பயன்பாட்டாளர்கள் அதனை ரிப்போர்ட் செய்யும் வசதி விரைவில் சேர்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை போன்று இன்ஸ்டாகிமையும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரபலங்கள் அதிகமாக பதிவிடும் புகைப்படங்களை வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு, புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமூக வலைதளங்கள் மூலம் பொய்யான தகவல்கள், வதந்திகள் பரப்பப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகளை தடுக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் ஒரு பதிவு பொய் என நினைத்தால் அதனை பயன்பாட்டாளர்கள் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.