2033க்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்: நாசா திட்டம்

2033க்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்: நாசா திட்டம்
2033க்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்: நாசா திட்டம்
Published on

2033ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான அங்கீகாரத்தினை நாசாவுக்கு வழங்கும் புதிய சட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்டம் ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து, நாசாவுக்கு 19.5 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கவும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான விளக்கமான திட்ட அறிக்கையைத் தயாரித்து வரும் டிசம்பர் ஒன்றாம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நாசாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்போலோ விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா ஆய்வு மையம் கவனம் செலுத்தி வருகிறது. அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யவும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளுக்காக கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளநிலையில், மற்றொரு ரோவர் விண்கலத்தினை 2020 வாக்கில் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. சிவப்பு கோளில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வினை இந்த விண்கலம் மேற்கொள்ளும் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com