ட்விட்டரில் எடிட் செய்வதற்கு பதிலாக 'கிளாரிஃபை' - ஆலோசிக்கும் ஜாக்!

ட்விட்டரில் எடிட் செய்வதற்கு பதிலாக 'கிளாரிஃபை' - ஆலோசிக்கும் ஜாக்!
ட்விட்டரில் எடிட் செய்வதற்கு பதிலாக 'கிளாரிஃபை' - ஆலோசிக்கும் ஜாக்!
Published on

ட்விட்டரில் எடிட் செய்யும் வசதிக்கு பதிலாக 'கிளாரிஃபை' என்ற ஆப்ஷனை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக  நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்சே தெரிவித்துள்ளார்

உலக அளவில் முக்கியமான சமூக வலைதளங்களாக  ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை இருக்கின்றன. நடிகர், நடிகைகள் தொடங்கி பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரை இந்தச் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர். இந்த ஒவ்வொரு சமூக வலைதளத்திற்கு கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் உள்ளனர். 

அந்த வகையில் ட்விட்டர் என்பது மிகவும் முக்கியமான சமூக வலைதளமாக இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் தங்களது எண்ணங்களை பதிவிட ட்விட்டர் ஒரு சிறந்த களமாக உள்ளது. ஒரு நடிகரின் படம், ட்ரெய்லர், டீசர் என எது ஒன்று வெளியாகும் போதும் அந்தச் செய்தி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிவிடும். அதேபோல், முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் பலவும் ட்விட்டரில் முதலிடம் பிடித்துவிடும். 

இப்படி பலராலும் பயன்படுத்தப்படும் ட்விட்டரில் ஒருமுறை நீங்கள் பதிவிட்ட ட்விட்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் எடிட் செய்யும் வசதி கிடையாது. வேண்டுமானால் பதிவு செய்த ட்விட்டை டெலிட் செய்துவிட்டு மீண்டும் பதிவிட வேண்டும். பேஸ்புக், இன்ஸ்டாவில் எடிட் செய்யும் வசதி இருப்பது போல ட்விட்டரிலும் கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கோரிக்கைக்கு ட்விட்டரின் நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்சே இன்னும் தலையசைக்கவில்லை. 

எடிட் செய்யும் வசதி குறித்து ஆலோசித்து வருவதாக கூறி வரும் அவர், அதற்கு பதிலாக வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்தே யோசித்து வருகிறார். சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் பேசிய ஜாக், எடிட் ஆப்ஷனுக்கு பதிலாக 'கிளாரிஃபை' என்ற ஆப்ஷனை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். அதாவது நாம் முதலில் எழுதிய ட்வீட் அப்படியே இருக்கும் அதற்கு கீழே 'கிளாரிஃபை' என்ற ஆப்ஷன் இருக்கும். நாம் மறுபடி திருத்தி பதிவிட விரும்பும் பதிவை அந்த 'கிளாரிஃபை' ஆப்ஷனில் பதிவிடலாம் என்று தெரிவித்துள்ளார். 

ஆனால் 'கிளாரிஃபை' என்ற ஆப்ஷன் பயனற்றது என்றும், தவறான பதிவை வைத்துக்கொண்டு மற்றொரு ட்விட்டை பதிவிடுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்றும் ட்விட்டர் பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

எடிட் ஆப்ஷன் வைத்துவிட்டால் பதிவுகளின் உண்மைத்தன்மையே போய்விடும் என்று மக்கள் அவர்களின் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் என்று ஜாக் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com