‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தில் உள்ள ஸ்பேஸஸ் உரையாடல் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இதில், தற்போது புதிய அம்சம் ஒன்றை சோதித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஸ்பேஸஸ் உரையாடல்களை ஹோஸ்ட் செய்யும் பயனர்கள் அதனை ரெக்கார்ட் செய்திருந்தால் ‘குட்டி குட்டி’ கிளிப்புகளாக டைம்லைனில் பகிரலாம் என தெரிகிறது.
இப்போதைக்கு இந்த அம்சம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் இணையதள பயனர்களும் இந்த அம்சத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் ‘தி வெர்ஜ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் கிளிப்புகள் அதிகபட்சம் 30 நாட்கள் வரை லைவாக இருக்கும் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஜோசப்.ஜே.Nunez தெரிவித்துள்ளார். இப்போதைக்கு இது ஸ்பேஸஸ் உரையாடலை ஹோஸ்ட் செய்யும் நபர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. கடந்த 2020-இல் நேரடி உரையாடலுக்காக ஸ்பேஸஸ் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. விரைவில் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.