இனி 280 எழுத்துகளில் ட்விட் போடலாம்..!

இனி 280 எழுத்துகளில் ட்விட் போடலாம்..!
இனி 280 எழுத்துகளில் ட்விட் போடலாம்..!
Published on

ட்விட்டரில் பதிவிடும் போது இனிமேல் 280 எழுத்துகள் வரை  பதிவிடலாம்.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் பாலிவுட் பிரபலங்கள், கோலிவுட் பிரபலங்கள், தமிழக அரசியல் தலைவர்கள் என அனைத்து பிரபலங்களும் ட்விட்டரில் அவ்வப்போது தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இதனால் அன்றாட நிகழ்வுகளை உடனடியாக அப்டேட் செய்து கொள்வதற்கும், பிரபலங்கள் என்ன தான் சொல்கிறார்கள் என தெரிந்துகொள்வதற்கும் இன்றைய இளம் தலைமுறைக்கு ஒரு மிகச் சிறந்த பிளாட் பார்மாக ட்விட்டர் இருக்கிறது.

இத்தகைய ட்விட்டரில், நீங்கள் ஒரு பதிவு போட வேண்டும் என்றால், முன்னதாக 140 எழுத்துகளுக்குள் மட்டுமே போட முடியும். எனவே, என்ன சொல்ல வருகிறோம் என்பதை, கருத்து பிசகின்றி 140 எழுத்துகளுக்குள் சொல்லியாக வேண்டும். இதனால் அதன் பயன்பாட்டாளர்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர். இதனை அறிந்த ட்விட்டர் நிர்வாகம், ட்விட் பதிவிடுவதற்கான 140 எழுத்துகள் என்ற  வரம்பை 280 எழுத்துகள் என்று இரட்டிப்பாக்கி கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில் அனைத்து ட்விட்டர் பயன்பாட்டாளர்களும் 280 எழுத்துகளில் ட்விட் போடும் வசதியை தற்போது ட்விட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com