டைரக்ட் மெசேஜில் குரலை பதிவு செய்து அனுப்பும் வசதியை கொண்டுவரும் முயற்சியில் ட்விட்டரில் இறங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் முதல் இந்திய பிரதமர் வரை உலகப் பிரபலங்கள் குவிந்திருக்கும் சமூக வலைத்தளமாக ட்விட்டர் திகழ்கிறது. பல அதிகாரப் பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் தளமாக ட்விட்டர் திகழ்கிறது. ஆனால், மற்ற சமூக வலைத்தளங்களில் இருக்கும் அளவிற்கு ட்விட்டரில் கூடுதல் வசதிகள் இல்லை. வார்த்தைகளைகூட அளவாக தான் எழுத முடியும். அதற்குமேல் கமெண்ட் ஆப்ஷனை இணைத்து தான் எழுதமுடியும்.
இந்நிலையில், பயன்பாட்டாளர்களின் கோரிக்கை அறிந்து புதிய அப்டேட் ஒன்றை ட்விட்டர் கொண்டுவரவுள்ளது. அதன்படி, ட்விட்டரின் டைரெக்ட் மெசேஜ் மூலம் குரல் பதிவை அனுப்பும் வசதி சோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிரேசிலில் சோதிக்கப்பட்டு வரும் இந்த அப்டேட் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.