செல்ஃபோனில் இன்கமிங் அழைப்புக்கான ரிங் டோன் நேரம் 30 விநாடிகளாக ட்ராய் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் லேண்ட்லைனில் இன்கமிங் அழைப்புக்கான ரிங் டோன் நேரம் ஒரு நிமிடமாகவும் நிர்ணயம் செய்துள்ளது.
இந்தியாவில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் சாரசரியாக 45 நொடிகளுக்கு போன் ரிங்கிங் நேரத்தை வைத்திருந்தனர். சமீபத்தில் ஜியோ தனது ரிங் நேரத்தை 20 நொடிகளாக குறைத்தது. இதற்கு ஏர்டெல் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ‘டிராய்’ இடம் புகார் அளித்தது.
இதைத்தொடர்ந்து ஜியோ நிறுவனம் இந்த ரிங் டோன் நேரத்தை 25 நொடிகளாக மாற்றியது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது ரிங் டோன் நேரத்தை 25 நொடிகளாக மாற்றியது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் டிராய் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் “ஜியோ நிறுவனம் திடீரென ரிங் நேரத்தை குறைத்தது குறித்து நாங்கள் பல முறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே நாங்களும் எங்களது ரிங் நேரத்தை 25 நோடிகளாக குறைக்க உள்ளோம்” எனத் தெரிவித்திருந்தது. அத்துடன் வோடாஃபோன் நிறுவனமும் தங்களது ‘ரிங்’ நேரத்தை 25 நொடிகளாக குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், செல்ஃபோனில் இன்கமிங் அழைப்புக்கான ரிங் டோன் நேரம் 30 விநாடிகளாக ட்ராய் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் லேண்ட்லைனில் இன்கமிங் அழைப்புக்கான ரிங் டோன் நேரம் ஒரு நிமிடமாகவும் நிர்ணயம் செய்துள்ளது.