நமது பயணங்களை எளிமையாக்க ஹைப்பர் லூப் எனும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகவுள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நமது பயணங்கள் எளிமையாகி வருகின்றன. கடந்த காலங்களை ஒப்பிடுகையில் போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து, அதிவிரைவு ரயில்கள் போன்றவை நமது தொலைத்தூர பயண நேரத்தை குறைக்கின்றன. தற்போது மேலும் இந்த நேரத்தை குறைக்கும் வண்ணம் ஹைப்பர் லூப் எனும் புதிய தொழில்நுட்பம் உருவாகி வருகிறது.
ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தை முதல்முறையாக முன்வைத்தவர் உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்சின் தலைமை பொறுப்பிலுள்ள எலான் மஸ்க் தான்.
ஹைப்பர் லூப் தொழிநுட்பம் என்றால் என்ன? இதன்மூலம் பயணங்கள் எப்படி எளிமையாகும்?
காந்த விசையை பயண்படுத்தி ரயில்களை இயக்குவதே ஹைப்பர் லூப் தொழில்நுட்பம்.அதாவது ஒரு குழாயினுள் ரயிலை செலுத்துவது,இதன்மூலம் விமானத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டம் குறித்து கடந்த 2013ஆம் பேசிய எலான், இதற்கு அதிக முதலீடு தேவை என்பதால் பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து லண்டனை சேர்ந்த விர்ஜின் குரூப் இந்தத்திட்டத்தில் இணைந்தது. இதனையடுத்து இத்திட்டம் விர்ஜின் ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு இத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான சோதனை முயற்சிகள் நடைப்பெற்று வருகிறது.