சிம் பிரச்னையா? இனி எளிதில் சேவையை மாற்றலாம்!

சிம் பிரச்னையா? இனி எளிதில் சேவையை மாற்றலாம்!

சிம் பிரச்னையா? இனி எளிதில் சேவையை மாற்றலாம்!
Published on

மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மட்டும் மாற்றும் வசதியை மேலும் எளிதாக்க நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனைத்து இடங்களிலும் ஏர்செல் சிம் சேவை முடங்கியது. இதையடுத்து அந்த சேவையை
பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும், வேறு சிம் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் வேறு சிம் சேவையை பெற வேண்டுமென்றால், அதற்கு ஏர்செல்லில் இருந்து சிம் சேவை மாற்று தொழில்நுட்பத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் ஏர்செல் நிறுவனத்தில் இருந்து வரும் மெசெஜ் கோட்-ஐ, எந்த சிம் சேவைக்கு மாற விரும்புகிறீர்களோ அங்கு வழங்க வேண்டும்.

இந்த நடைமுறையில் தான் தற்போது சிம் சேவையை வாடிக்கையாளர்கள் மாற்றி வருகின்றனர். ஆனால் நெட்வொர்க் இருந்தால் தான், இது சாத்தியம். நெட்வொர்க் கிடைப்பதே பிரச்னை என்னும் போது, எவ்வாறு மற்ற சேவையை பெற முடியும். இதற்கிடையே ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் ஜியோவிலும் சற்று நெட்வொர்க் பிரச்னைகள் ஏற்பட்டது. 

இந்நிலையில் மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை மட்டும் எளிதில் மாற்றுவதற்கான புதிய நடைமுறைகள் அடங்கிய
கலந்தாலோசனை அறிக்கையை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிடவுள்ளது. இம்மாத இறுதியில் அந்த நடைமுறை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடா டெலிசர்வீசஸ‌ வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களுக்கு மாறுவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, அதற்கு தீர்வு காண டிராய் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com