சந்திரன்
சந்திரன்Google

இன்று நிலவு தினம்: சந்திரனை பற்றிய ஐந்து முக்கிய தகவல்கள்

ஜூலை 20- இன்று சந்திரனை கொண்டாடும் தினமாக சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்படுகிறது

இன்று ஏன் சர்வதேச நிலவு தினம்?

1. 1969 ஜூலை 20-ம் தேதி முதன்முதலில் நிலவில் காலடி பதித்தவர் நீல்ஆம்ஸ்ட்ராங். அதனால் இன்றைய தினம் சர்வதேச நிலவுதினமாக கொண்டாடப்படுகிறது.

நிலவில் ஆம்ஸ்ட்ராங் பதித்த கால்தடம் அழியாமல் இன்றும் இருக்குமா?

2. நிலவில் காற்று இல்லை மழை இல்லை... ஆதலால் பல நூற்றாண்டு வரை கால் தடம் அழியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

நிலவின் மீது பள்ளங்களும், குழிகளும் இருப்பது எதனால்?

3. நிலவில் வளிமண்டலம் இல்லாததால் நிலவின் மீது விண்கற்கள் மோதுவதால் அதன்அச்சு அப்படியே இருக்கிறது. இதனால் நிலவில் அதிக பள்ளங்களும்  குழிகளும் காணப்படுகின்றன.

நிலவில் பூமியை போன்று நில அதிர்வு, நில நடுக்கங்கள் ஏற்படுமா?

4. விண்கற்கள் அதிக வலிமையுடன் மோதும்போது நிலவில் நில அதிர்வு, நில நடுக்கங்கள் ஏற்படும்

சந்திரன் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? சந்திரன் பூமியை எவ்வாறு பாதுகாக்கிறது?

5. சந்திரன் இல்லாவிட்டால் பூமி மிகவும் வித்தியாசமான உலகமாக இருக்கும். சந்திரனின் ஈர்ப்பு விசையானது நமது கிரகத்தை அதன் அச்சில் அதிகம் தள்ளாடுவதைத் தடுக்கிறது. இது நமது காலநிலையை உறுதிப்படுத்த உதவுகிறது. பூமியின் கடல் அலைகளை உருவாக்குவதில் சந்திரனும் முக்கிய பங்கு வகிக்கிறது .

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com