விண்வெளியில் 47 வருடம் தொடர் பயணம்.. செயலிழந்து வரும் வாயேஜர் 1.. விடாது உயிர்பிக்கும் விஞ்ஞானிகள்!

நமது சூரிய குடும்பத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பிய நாசா விஞ்ஞானிகள் வாயேஜர் 1 என்ற விண்கலத்தை 1977ல் விண்வெளிக்கு அனுப்பினர்.
வாயேஜர்1
வாயேஜர்1கூகுள்
Published on

நமது சூரிய குடும்பத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பிய நாசா விஞ்ஞானிகள் வாயேஜர் 1 என்ற விண்கலத்தை 1977ல் விண்வெளிக்கு அனுப்பினர். விஞ்ஞானிகள் எதிர்பார்த்தப்படி வாயேஜர் 1 விண்கலமானது செவ்வாய், வியாழன், நெப்டியூன் புளூட்டோ கிரகத்தை அருகில் சென்று ஆராய்ந்து விஞ்ஞானிகளுக்கு தகவல் அளித்தது. பிறகு 1986ல் நமது சூரிய குடும்பத்தை தாண்டியும் தனது பயணத்தை மேற்கொண்டது. கிட்டத்தட்ட 47 வருடங்களாக எங்கும் நிற்காமல் அது தொடர்ந்து பயணித்துக்கொண்டு இருக்கிறது. இது பயணிக்கும் வழியில் எடுக்கும் புகைப்படம் மற்றும் தரவுகளை சேகரித்து பூமிக்கு ரேடியோ சிக்னல் உதவியால் அனுப்பியபடி இருக்கிறது. அப்படி நமது சூரிய குடும்பத்தை தாண்டி செல்லும் வழியில், நமது பூமியை எடுத்த படம் தான் இது...

வாயேஜர்1 விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வாளர்களின் காலத்திற்குப் பிறகும் இது செயல்பட்டு வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல், இந்த வாயேஜர்1 விண்கலத்தில் முக்கிய பாகமாக மைக்ரோசிப் உள்ளது. இது வெறும் 4 வருடங்கள் மட்டுமே வேலை செய்யும் என்று ஆய்வாளர்கள் நம்பி இருந்த நிலையில், இந்த சிப்பானது தொடர்ந்து 47 வருடங்களாக வேலை செய்துக்கொண்டிருப்பது விஞ்ஞானிகளுக்கு மேலும் ஆச்சர்யத்தை அளித்து வருகிறது.

பூமியிலிருந்து கிட்டத்தட்ட15.2 பில்லியன் மைல்களை தாண்டி அது இன்றும் பயணித்துக்கொண்டு இருப்பது பெருமைக்குரிய செய்தி. இந்த விண்கலத்தில் கோல்டன் ரெக்கார்ட் ப்ளேட் என்ற ஒன்று இருக்கிறது அதில் பூமியைப்பற்றிய அனைத்து தகவல்களையும் விஞ்ஞானிகள் கோட்வேர்டாக மாற்றிஅதில் பொருத்தியுள்ளனர். காரணம், இந்த வாயோஜர் பயணிக்கும் வழியில் பூமியைப்போன்று வேற்று கிரகத்தில் நம்மைப்போன்று உயிரினங்கள் இருந்தால் அவர்கள் இந்த சிக்னலை பெற்று பதில் அனுப்பமுடியும். அதற்காக கோல்டன் ரெக்கார்ட் ப்ளேட்டை விஞ்ஞானிகள் பொருத்தியுள்ளனர்.

இது இப்படி இருக்க... வாயேஜர் 1ல் இருக்கும் மூன்று த்ரஸ்டரில் ஒன்றான டிராஜெக்டரி கரெஷன் மேனுவர் த்ரஸ்டர் சிஸ்டத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது திரவ ஹைட்ராசைன் மூலம் இரிடியம் பூசிய அலுமினிய ஆக்சைடுடன் வினைபுரிந்து நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனாக தன்னிச்சையாக சிதைகிறது. இதன்மூலம் அதில் இருக்கும் ரேடியோ ஆண்டெனாவானது பூமியை நோக்கி சிக்னல்களை அனுப்பவும் பெறவும் முடியும்.

இந்த த்ரஸ்டர் ஹீட்டரில் உள்ள ரப்பரில் பிரச்சனை ஏற்பட்டு அது எரிகுழாயில் அடைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகையால் பொறியாளர்கள் அதை ஒரு மணி நேரம் அணைத்து வைத்தனர். பிறகு அதை மீண்டும் உயிர்பித்து செயல்பட வைத்துள்ளனர். இருப்பினும் அதன் வாழ்நாள் எத்தனை என்று தெரியவில்லை இன்னும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டால் 50 வருடத்தை எட்டிவிடும். மேலும் இதில் உள்ள ரேடியோ சிக்னலானது உரையாடல்களில் மிக நீண்ட இடைநிறுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆக வாயோஜர் 1 தனது வாழ்நாளை முடித்துக்கொண்டாலும், அது தொடர்ந்து இந்த பிரபஞ்சத்தில் நிற்காமல் சென்றுக்கொண்டேதான் இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com