150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய சந்திர கிரகணத்தை இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் ரசித்தனர்.
இந்தியாவில் இன்று மாலை 6.25 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம் 7.25 மணியளவில் நிறைவடைந்தது. உலகம் முழுவதும் இந்த
சந்திர கிரகணம் ப்ளூ மூன், ப்ளெட் மூன் மற்றும் சூப்பர் மூன் என மூன்று பெயர்களில் அழைக்கப்பட்டது. பூமியை சுற்றும் சந்திரன்,
நீள்வட்டப்பாதையில் பூமிக்கு அருகில் வரும்போது ஏற்பட்ட கிரகணம் இது என்பதால் வழக்கத்தை விட பெரியதாக நிலா
காட்சியளித்தது. அத்துடன் பிரகாசமான ஒளியையும் வீசியது. சென்னையில் சந்திர கிரகணத்தை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில்
ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.