சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 2:35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. முன்னதாக, சந்திரயான் 2 திட்டத்தின் லேண்டர், நிலவின் மேற்பரப்பை அடையும் போது இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வெடித்து சிதறியது. எனினும் சந்திரயான்-2 அனுப்பிய ஆர்ப்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் ரோவர் மற்றும் லேண்டர் வடிவமைப்பு ரீதியில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக லேண்டரில் இஞ்சின்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்த லேண்டெர் மற்றும் ரோவரின் சிறப்பம்சங்களை காணலாம்.
லேண்டர் :
ஆயுள் காலம் : 14 நாட்கள், ஒரு நிலவு நாள்
எடை : 1749.86 கிலோ
மின் சக்தி : 738 வாட்ஸ்
லேண்டரில் உள்ள பகுதிகள் : 3
தொலைத் தொடர்பு பாகங்கள் : ISDN, சேனல் 2 ஆர்ப்பிட்டர், ரோவர்
லேண்டரில் உள்ள பகுதிகள் :
RAMBHA-LP :
அணுக்களின் உள்ள அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களின் மாற்றங்களையும், பிளாஸ்மாவில் உள்ள அடர்த்தியையும் நேரத்தை பொறுத்து அளவிடும் கருவி இது.
CHASTE :
Chandra's surface ThermoPhysics Experiment
நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள் வெப்ப பண்புகள் குறித்து அளவீடு செய்யும் கருவி இது.
ILSA :
Instruments for Lunar Seismic Activity
நிலவின் நிலப்பரப்பில் ஏற்படும் நில அதிர்வுகள் நில விரிசல்கள் மேடுகள் பள்ளங்கள் உள்ளிட்டவை குறித்து அளவீடு செய்யும் கருவி இது.
ரோவர் :
ஆயுள் காலம் : 14 நாட்கள், ஒரு நிலவு நாள்
எடை : 26 கிலோ
மின் சக்தி : 50 வாட்ஸ்
லேண்டரில் உள்ள பகுதிகள் : 2
தொலைத் தொடர்பு பாகங்கள் : லேண்டர்.
ரோவரின் பகுதிகள் :
APXS :
Alpha Particle X ray spectrometer
நிலவில் மேற்பரப்பில் உள்ள வேதி சேர்மங்கள், நுண்ணுயிர் சேர்மங்கள் அதன் உருவாக்கத்திற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யும்.
LIBS
Laser induced Breakdown Spectrometer
மக்னீசியம், அலுமினியம், சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், இரும்பு உள்ளிட்டவற்றின் மூலக்கூறுகள் குறித்து நிலவின் பாறைகளிலும், மணலிலும் ஆய்வு மேற்கொள்ளும்...
உந்துவிசை மாதிரியின் பகுதிகள் :
Propulsion model Payload
Spectro Polarimetric Signature to capture Habitable planet Earth.