அறிவோம் அறிவியல் 15 | முக்கியமான 3 எக்ஸோப்ளானட்ஸ்!

கடந்த வாரம், எக்ஸோ ப்ளானட் என்றால் என்ன என்பதை பற்றி விரிவாக பார்த்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக 3 முக்கிய எக்ஸோ ப்ளானட்ஸ்களை பற்றி அறிவோம்...
பால்வெளி
பால்வெளிபுதியதலைமுறை
Published on

TOI-4379 b

TOI-4379 b
TOI-4379 bநாசா

இது F-வகை நட்சத்திரத்தைச் சுற்றி வரும் நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் வியாழனைப்போன்று ஒரு வாயு ராட்சத வெளிக்கோள்.

இதன் நிறை, நமது வியாழனைப்போன்று இரண்டு மடங்கு நிறையைக்கொண்டது. மேலும் இது பூமியிலிருந்து 24 பில்லியன் தொலைவில் இருக்கிறது. Transiting Exoplanet Survey Satellite (TESS) இதை 2024ல் கண்டுபிடித்துள்ளது.

TOI-6029 B

இது பூமியிலிருந்து 1967 ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது. இதுவும் வியாழனைப்போன்ற ஒரு கிரகம். இதுவும் F வகை நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. நமது வியாழனைப்போன்று ஒன்றரை மடங்கு எடைக்கொண்டது. இது தன் நட்சத்திரத்தை சுற்றி முடிக்க 5.8 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இதை விஞ்ஞானிகள் 2024ல்தான் கண்டுபிடித்துள்ளனர்.

ஜிஜே 238 பி (JIJ 238 b)

இந்த கோள் பூமியிலிருந்து 671 மில்லியன் ஒளிஆண்டு தொலைவில் இருக்கிறது. மேலும் பூமியை ஒத்து இருக்கும் இந்த கிரகமானது M வகை நட்சத்திரத்தை 1.7 நாட்களுக்குள் சுற்றி முடித்துவிடும். பூமியைப்போன்று காணப்படும் இந்த கிரகத்தில் வளிமண்டலங்கள் இருக்கிறதா, மேலும் உயிரினங்கள் வாழத்தகுதியானதுதானா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com