லக்ராஞ்சியன் (L1) புள்ளியை அடையுமா ஆதித்யா விண்கலம்..?

இன்று மாலை எல்-1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது.
ஆதித்யா விண்கலம்
ஆதித்யா விண்கலம்புதிய தலைமுறை
Published on

இந்தியாவின் விண்வெளி துறை சாதனைகள் பட்டியலில் இன்று மாலை புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம் எல்.1 புள்ளியை அடையவுள்ளது. ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்-1 புள்ளியை இன்று மாலை சென்றடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி - சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்படவுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை இன்று நெருங்கவுள்ளது. இன்று மாலை எல்-1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ஆதித்யா விண்கலம்
பணியிலிருந்த காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த திட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளை அடுத்து நான்காவது நாடாக உருவெடுக்கும்.

மேலும் இது குறித்து எளிமையாக விஞ்ஞானியும் பேராசிரியருமான திரு. த.வி.வெங்கடேஸ்வரன் அளிக்கும் விளக்கம், இதோ....

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com