W20 : இந்த விலையில் இதுதான் பெஸ்ட் TWS ஹெட்செட்டா..?
Boult W20(3.5 / 5)
தற்போதைய இளசுகளின் மோஸ்ட் வாண்டட் பட்டியலில் எப்போதுமிருக்கும் விஷயம் TWS ஹெட்செட். கோபத்தைக்காட்டக்கூட இப்போதெல்லாம் மொபலைத் தூக்கிப் போடுவதற்கு, TWSன் ஒரு பக்கத்தைத் தூக்கி எறிகிறார்கள். அந்த அளவுக்கு, சின்ன சைஸில் க்யூட்டாக இருப்பதால், ஏதாவது ஒரு TWS ஹெட்செட்டை எல்லோரும் வைத்திருக்கும் நிலையைப் பார்க்கிறோம். அதே சமயம், இத்தகைய TWS ஹெட்செட்களின் விலை என்பது பெரும்பாலும் 4000 ரூபாய்க்கு மேல் இருப்பதால், பலரால் இதை எளிதாக வாங்க முடியாத சூழல் இருந்தது.
அதை முற்றிலுமாக ஒழித்ததில் BOULT, boat, fire boltt உள்ளிட நிறுவனங்களின் பங்கு அதிகம். இந்த முறை நமக்கு மார்க்கெட்டில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் W20 மாடல் ரிவ்யூவிற்கு வந்தது. அதை ஒருவாரம் பயன்படுத்திய பிறகே, இந்தக் கட்டுரையை எழுதுகிறோம்.
Colors
பைன் க்ரீன், ஸ்பேஸ் பிளாக், கிளேசியர் ப்ளூ
SPECS
BLUETOOTH v 5.3
ZEN ENC MIC
10 mins charge = 120 mins playtime
டைப் சி சார்ஜிங்
13mm BOOMX டிரைவர்
32 மணி நேர பிளே டைம்
45ms low latency
IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட்
sweatproof
rainproof
splash proof
டிசைன்
மிகவும் காம்பேக்ட்டான TWS மாடலாக இதை வடிவமைத்திருக்கிறது போல்ட் நிறுவனம். அதனாலேயே எந்த விதமான பட்டனும் இல்லை. ஸ்விட்ச் ஆன் செய்யக்கூட tap வசதியைத்தான் பயன்படுத்த வேண்டியதிருக்கிறது. டைப் சி சார்ஜிங் போர்ட்டுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால், எளிதாக மொபைல் சார்ஜரை வைத்தே இதை நான் சார்ஜ் செய்துகொள்ள முடியும். சார்ஜ் எவ்வளவு இருக்கிறது என்பதை ஈயர் பட் கேஸில் இருக்கும் புள்ளிகளை வைத்து நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
அனுபவம்
மிகவும் சிறிய அளவில் இருப்பதால், பட்டன்கள் எதுவும் இல்லை என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். ஆனால், பயன்பாட்டிற்கு அது பெரும் பிரச்னையாக இல்லை. முதல் சில மணி நேரம் மட்டுமே கடினமாக இருந்தது. பாடல்கள் கேட்கவும், அழைப்புகளை ஏற்கவும் இது சிறப்பானதொரு ஹெட்செட்டாகவே இருக்கிறது. பெரிய அளவில் noise இல்லை.
2,499 என விலை நிர்ணயம் செய்திருந்தாலும் இந்த மாடல் 999 ரூபாய்க்கே ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைப்பதால் , இந்த விலைக்கு நிச்சயம் இதை வாங்கலாம். பாடல்கள் அதிகம் கேட்பீர்கள் எனில் இது உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.