BOULT CROWN R | ஸ்டீல் பாடி ஸ்மார்ட் வாட்ச்... பெர்பாமன்ஸில் எப்படி..?
BOULT CROWN R (3.5 / 5)
விதவிதமான ஸ்மார்ட்வாட்ச்களை வரிசையாக வெளியிட்டு வருகிறது BOULT நிறுவனம். மார்க்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச்களில் ப்ளூடூத் காலிங் வசதி வேண்டுமென்றால், கொஞ்சம் அதிகம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். அதற்கு மாற்றாக குறைவான விலையிலேயே நிறைய அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது BOULT CROWN R
SPECS
1.52" வட்டமான HD ஸ்கிரீன்
100+ SPORTS MODES
600 nits BRIGHTNESS
ஹெல்த் மானிட்டர் செய்யும் வசதி
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
150+ வாட்ச் முகங்கள்
Zero Bezels
Dedicated Mic & speaker
BOULT HEALTH
Health Rate Monitoring
Blood Oxygen Monitoring
Female Menstrual Tracking
Blood Pressure Monitor
Sleep Monitoring
Activity Tracking
Breath Training
டிசைன்
STAINLESS STEEL பாடியுடன் வந்திருப்பதால், வாட்ச் கையில் அணிந்திருக்கும் போது ஒரு ப்ரீமியம் ஃபீலைக் கொடுக்கிறது. 1.52" வட்ட வடிவிலான முகப்பு இருப்பதால் , டிஸ்பிளே சிறப்பாகவே இருக்கிறது.
வாட்சுடன் வரக்கூடிய மெட்டாலிக் ஸ்டிராப் அட்ஜஸ்ட்மெண்ட் டூலை வைத்து நமக்கு ஏற்றார் போல் வாட்ச்சின் அளவை மாற்றிக்கொள்ள முடியும்.
பொதுவாக இருக்கும் ஸ்போர்ட்ஸ் மோடுடன் , இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் நிறைய விளையாட்டுக்களை சேர்த்திருக்கிறார்கள். அதனால், உடற்பயிற்சியோ, விளையாட்டோ உங்களுக்குத் தேவையானவற்றை எளிதாகவே இதில் நீங்கள் தேர்வு செய்து சேர்த்துக்கொள்ள முடியும்.
ஸ்மார்ட் வாட்ச்களில் ப்ளூடூத் காலிங் வசதி என்பது ப்ரீமியம் செக்மெண்ட் வாட்ச்களில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு வசதி. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் அடக்கவிலை 4,999 என சொல்லப்பட்டாலும் , மார்க்கெட்டில் 2000 ரூபாய்க்கே இந்த மாடல் கிடைக்கிறது. இந்த விலைக்கு ப்ளூடூத் காலிங் என்பது உண்மையாகவே ஒரு போனஸ். உங்கள் மொபைல் 10 மீட்டர் தொலைவில் இருந்தாலும், ஸ்மார்ட்வாட்ச்சில் இருக்கும் இந்த வசதி மூலம் உங்களால் கால்களை எடுக்க முடியும்.
600 nits brightness இருப்பதால் , வெளிச்சம் அதிகமான நேரங்களிலும் நம்மால் சுலபமாக டிஸ்பிளேவைப் பார்க்க முடிகிறது.
நிறம்
பிளாக் சிலிக்கான், கோல் பிளாக் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், புல்லட் சில்வர் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்
பிளஸ்
ப்ளூடூத் காலிங் வசதி
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட்
ப்ரீமியம் லுக்
மெட்டாலிக் ஸ்டிராப் அட்ஜஸ்ட்மெண்ட் டூல்
AI வாய்ஸ் அசிஸ்டெண்ட்
மைனஸ்
மெட்டாலிக் ஸ்டீல் பாடி என்பதால் சிலர் இதை எடை அதிகமாக இருப்பதாக உணரலாம்.
வெர்டிக்ட்
ப்ளூடூத் காலிங் வசதி, வாட்டர் ரெசிஸ்டெண்ட் என பல விஷயங்களில் இந்த வாட்ச் க்ளிக் அடிப்பதால், ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டிசைனில் ஸ்மார்ட் வாட்ச் வாங்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த வாட்ச்சை வாங்கலாம்.