குழந்தைகளை பாதிக்கும் ஸ்மார்ட்ஃபோன் நீல ஒளவீச்சு!

குழந்தைகளை பாதிக்கும் ஸ்மார்ட்ஃபோன் நீல ஒளவீச்சு!
குழந்தைகளை பாதிக்கும் ஸ்மார்ட்ஃபோன் நீல ஒளவீச்சு!
Published on

ஸ்மார்ட்ஃபோனின் நீல ஒளிவீச்சு, குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினருக்கு பல உடல்நலப்பிரச்னைகளை ஏற்படுத்துவது ஆய்வில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலராடோ பவுல்டெர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன்களின் நீலக்கதிர்வீச்சு, உடல்நலனுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குழந்தைகள், மற்றும் பதின்பருவத்தினருக்கு மூளை, கண்கள் போன்ற உறுப்புகளை பாதிப்பதோடு, உறக்கத்தையும் கெடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்துடன் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 17 பேரில் 5 பேர், ஸ்மார்ட்ஃபோன்களால் தாமதமாக தூங்க நேரிடுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தூக்க நேரம் குறைவது, சரியாக தூங்காதது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். கண்கள் முழுமையாக வளராத குழந்தைகள், சிறார்களுக்கு நீல ஒளிவீச்சு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களின் உயிர்கடிகாரத்திலேயே தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி தூக்கத்தை ஊக்குவிக்கும் மெலடொனின் ஹார்மோன் சுரப்பை குறைப்பது போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும் என்று  ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com