தமிழை பிற மொழியினருக்கு கற்பிக்கும் வகையில் குறுஞ்செயலி - விரைவில் அறிமுகம்

தமிழை பிற மொழியினருக்கு கற்பிக்கும் வகையில் குறுஞ்செயலி - விரைவில் அறிமுகம்
தமிழை பிற மொழியினருக்கு கற்பிக்கும் வகையில் குறுஞ்செயலி - விரைவில் அறிமுகம்
Published on

தமிழைப் பிறமொழியினருக்குக் கற்பிக்கும் வகையில் திராவிட மொழிகள் உட்பட பிறமொழிகளில் பாடநூல்களும், பன்மொழி அகராதியுடன் தமிழ் கற்பிக்கும் குறுஞ்செயலிகளும் உருவாக்கப்படவுள்ளது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு கருவிகளில் பயன்படுத்தப்படும் வகையில், குறுஞ்செயலிகள் உருவாக்கப்படும் என்றும், அந்த செயலிகள் உலகத் தரத்தில் வடிவமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாடப் பக்கங்கள் மற்றும் சொற்களை கைப்பேசிக் கருவியில் இருந்து, பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்தில் இருக்கும் சொற்களைத் தொட்டால், அகராதியில் பொருள் காட்டும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டால் பயனருக்குத் தெரிவிக்கும் அறிவிப்புகளும் இதில் கிடைக்கும். ஆப்பிள், ஆண்டிராய்டு நிறுவனங்களின் மாற்றத்துக்குட்படும் விதிகள் உள்ளடக்கியதாகவும் இந்த செயலிகள் இருக்கும். பாடங்கள் குரல் வடிவிலும், காணொளி வடிவிலும் கிடைக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com