‘நமது நகரத்தை பாதுகாப்போம்’ | பெண்களின் பாதுகாப்புக்காக இலவச சிசிடிவிகள் வழங்கும் நிறுவனம்!

‘நமது நகரத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் பெண்களின் பாதுகாப்புக்காக இலவச சிசிடிவி வழங்கும் சேவையில் செக்யூர் கேம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இலவச சிசிடிவி
இலவச சிசிடிவிமுகநூல்
Published on

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சார்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளை அளிக்கும் நிறுவனமான செக்யூர் கேம், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான "நமது நகரத்தை பாதுகாப்போம்" (Secure Our City) என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2024 டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை சிறப்பு விமானத்தில் வைத்துத் தொடங்க உள்ளது.

இந்த விமானத்தில் யாரெல்லாம் பயணிக்க உள்ளார்கள்?

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 பெண்களுடன் இந்த சிறப்பு விமானம் புறப்படும்.

அவர்களுடன் இந்தியப் பிரதமரின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநருமான திரு எம்.கே நாராயணன் ஐபிஎஸ் (ஓய்வு) நிகழ்வில் கலந்துகொள்கிறார். இவருடன் செக்யூர் கேம் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ரிஜாய் தாமஸ், சிஓஓ திரு. எமில் ஜோஸ், மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களுடன் விமானத்தில் பயணம் செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

இலவச சிசிடிவி
சிவகங்கை: பிறந்த சில மணி நேரத்தில் உடலில் காயத்துடன் வீசப்பட்ட குழந்தை... யார் செய்தது இக்கொடூரத்தை?

திட்டத்தின் முக்கிய நோக்கம்:

‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்ட வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதன் மூலம்உடல் மற்றும் மன நலனை உறுதி செய்ய வேண்டும்’ என்ற விழிப்புணர்வை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரப்புவதே முதன்மை நோக்கம் என சொல்லப்படுகிறது.

முதற்கட்ட நிகழ்வு:

தொடக்க நிகழ்வாக முதலில் 100 பெண்களுக்கு 'செக்யூர் கேம்' நிறுவனம் ‘இலவச சிசிடிவி கேமரா வழங்கி’ கௌரவிக்க உள்ளது. உடன் அதை இலவசமாக பொருத்தியும் தருவார்களாம். ஒரு நகரத்திற்கு 10 ஆயிரம் சிசிடிவி என்ற இலக்கை நோக்கி இத்திட்டம் செயல்பட உள்ளது.

இலவச சிசிடிவி
குற்றஞ்சாட்டிய அறப்போர் இயக்கம்; வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் ராஜகண்ணப்பன்! என்ன நடந்தது?

யார் இதனை பெற்றுக்கொள்ளலாம்?

பொது இடங்களுக்கு இந்த இலவச சேவை கிடையாது. இந்த இலவச சிசிடிவி பெற விரும்புவோர் அதாவது, குடியிருப்புவாசிகள், பெண்கள் விடுதியினர், டே கேர் நிறுவனங்கள், ப்ளே ஸ்கூல்கள், நர்சரி பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், முதியோர் தங்குமிடம், ஆதரவற்றோர் இல்லங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் +91 96054 35521 என்ற எண்ணை தொடர்புகொண்டால் அவர்களுக்கு நிபுணர்களின் ஆலோசனையுடன் முழு நேரமும் கண்காணிக்க வசதியாக இலவச சிசிடிவி கேமராவும் கிடைக்கும்.

எங்கெல்லாம் இந்த சேவை வழங்கப்படவுள்ளது?

முதற்கட்டமாக, சென்னையில் தொடங்கப்படும் உலகளாவிய பிரசாரத்துக்குப் பின்னர் மும்பை, டெல்லி, பெங்களூரு, கொச்சி என பிற நகரங்களுக்கு செல்லும்..

அதனையடுத்து உள் மாவட்டங்கள் என இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இலவச சிசிடிவி
அமெரிக்கா | McDonald's Quarter Pounder சாப்பிட்டவர் மரணம்... 49 பேருக்கு E-Coli பாதிப்பு!

இலக்கு என்ன?

1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான “நமது நகரத்தை பாதுகாப்போம்" என்ற உலகளாவிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக 2030ம் ஆண்டுக்குள் இந்திய நகரங்கள் மற்றும் 150 நாடுகளில் பரவலாக ஒரு நகரத்திற்கு 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் இலவசமாக பொருத்திக் கொடுக்க (free installation) திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச சேவையும் உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com