430 கோடி ஆண்டுகள் பழமையான பாக்டீரியா படிமங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடல் வெந்நீர் ஊற்றுகளில் இருக்கும் நுண்ணுயிர் போலவே இந்த பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கியூபெக் பகுதியில் அமைந்துள்ள ஹட்சன் கடற்கரையோரம் இந்த படிமங்கள் கிடைத்துள்ளன. பூமி தோன்றிய சிறிது காலத்திலேயே இந்த பாக்டீரியாக்கள் உருவாகியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இரும்பு சத்து நிறைந்துள்ள இந்த படிமங்கள் நவீன பாக்டீரியாக்களின் குணங்களை ஒத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.