பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொறுத்தும் ஆய்வில் சாதனை!

பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொறுத்தும் ஆய்வில் சாதனை!
பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொறுத்தும் ஆய்வில் சாதனை!
Published on

பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பாக நடந்த தொடர் ஆய்வில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வாளர்கள் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளனர்.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் காத்து இருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் உள்ளனர். உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என்ற ஆய்வில் பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் பலனாக பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும். ஆனால் நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்ற நிலை இருந்தது.

எனவே பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் இருக்கும் ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ்களை அகற்றும் ஆய்வில் ஈடுபட்டனர். தற்போது அவற்றை அகற்றி வெற்றி பெற்றுள்ளனர். ஹாவர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த மரபியல் நிபுணர்கள் ஜார்ஜ் சர்ச் மற்றும் லுகான் யங் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளனர். இதுவரை 37 பன்றி உறுப்புகளில் பெர்வ் வைரஸ் தொற்றுகள் அகற்றப்பட்டுள்ளன.

இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இத்தகைய தொடர் ஆய்வுகளின் மூலம் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com