செவ்வாய் கிரகத்தில் இருக்கும் திரவநீர்! மனிதக் குலத்திற்கு மாபெரும் உதவியா?

ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை கொடுத்து வரும் செவ்வாய் கிரகம், தற்போது கொடுத்துள்ள தகவல் மனிதக் குலத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
 செவ்வாய் கிரகம்- திரவ நீர்தேக்கம்
செவ்வாய் கிரகம்- திரவ நீர்தேக்கம்Facebook
Published on

ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை கொடுத்து வரும் செவ்வாய் கிரகம், தற்போது கொடுத்துள்ள தகவல் மனிதக் குலத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆம்... நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் திரவ நீர்தேக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் இருப்பது தெரியவந்தாலும், நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போன்று இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருப்பது நாசாவின் இன்சைட் லேண்டர் நடத்திய ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.

 செவ்வாய் கிரகம்- திரவ நீர்தேக்கம்
அறிவோம் அறிவியல் 11 | ஆங்காங்கே தோன்றி மறையும் புயல்... 16 நிலவுகளுடன் ஜொலிக்கும் நெப்டியூன் கிரகம்!

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 11 முதல் 20 கிலோ மீட்டர் வரை அமைந்துள்ள இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் இடையில் தேங்கி நிற்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நாசா நிறுவனம், ஆழமாக மறைந்து இருக்கும் திரவ நிலையிலான ஒரு பெரிய நீர்தேக்கம் உலகளாவிய கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவிற்கு அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com