புதனுக்கு பயணிக்கும் புதிய விண்கலன்

புதனுக்கு பயணிக்கும் புதிய விண்கலன்
புதனுக்கு பயணிக்கும் புதிய விண்கலன்
Published on

புதன் கிரகத்தை ஆய்வு செய்யும் புதிய விண்கலன் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

புதன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்ய இரட்டை செயற்கைக்கோள்கள் கொண்ட விண்கலன் ஒன்று உருவக்கப்பட்டுள்ளது. இந்த இரு செயற்கைக்கோள்களும், விண்ணில் ஏவப்பட்ட பின்னர் புதன் கிரகத்தை சென்றடையும். அங்கு சென்ற பின்னர், அவை தனித்தனியாக பிரிந்து அவைகளுக்குரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு காட்சிகளை அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்துக்காக எக்ஸ் ரே கேமராக்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைகோளின் பயண நேரம் 7 ஆண்டுகள் ஆகும். அதாவது 2025- இல் தான் அது புதன்கிரகத்தை சென்றடையும். சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள் என்பதால் வெப்பநிலை அங்கு அதிகம் காணப்படுகிறது  

ஐரோப்பாவின் மெர்க்குரி பிளானட்டரி ஆர்பிட்டர் மற்றும் ஜப்பானின் மெர்க்குரி மேக்னேட்டோஸ்பெரிக் ஆர்பிட்டர் ஆகிய செயற்கைக்கோள்கள் ஃபிரெஞ்சு கினியாவில் உள்ள விண்கல ஏவுதளத்திலிருந்து அடுத்த ஆண்டு விண்ணிற்கு ஏவப்படவுள்ளது. புகழ்பெற்ற இத்தாலிய விஞ்ஞானியான பேபி கொழும்பின் பெயர் இந்த விண்கலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.புதன்கிரகத்தை விண்கலன் அடைய சூரியனை நோக்கி பயணிக்க வேண்டும். எனவே கடுமையான கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தை தாங்கும் வகையில் இந்த விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி, இதுவரை மேற்கொண்ட மிகச்சவாலான முயற்சிகளில் ஒன்று. புதிரான சிறிய உலகம் தான் புதன்கிரகம் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த மார்க் மெக்கொக்ரியன் கூறுகிறார். புதனுக்கு அனுப்பப்படும் முதல் விண்கலம் இது தான் என்பது குறிப்பிடதக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com