விண்வெளி வீரரான ஆம்ஸ்ட்ராங் சந்திரனிலிருந்து மண் உள்ளிட்ட சில தடயங்களை எடுத்து வந்த பை வரும் ஜுலை 20ம் தேதி நியூயார்க்கில் ஏலம் விடப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதன் முறையாக சந்திரனில் இறங்கினார். அவருடன் மற்றொரு விண்வெளி வீரரான புஜ் அல்ட்ரினும் இருந்தார். இதையடுத்து சந்திரனிலிருந்து ஒரு சில தடயங்கள், மண் போன்றவற்றை ஒரு பையில் சேகரித்து வந்தனர். இது மனித குலத்தின் பெரிய சாதனையில் அரிதான ஒன்றாகும். ஆம்ஸ்ட்ராங் கொண்டு வந்த பையில், மண் துகள்கள், சந்திர மண்டலத்தின் 5 வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரு செமீ விட குறைவான 12 பாறை படிவங்கள் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட்டன.
கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனிலிருந்து தடயங்களை எடுத்து வந்த அந்த பையும், ஆம்ஸ்ட்ராங்கும், அவரது தோழரான புஜ் அல்ட்ரின் இருவரும் இணைந்து கையொப்பமிட்ட நினைவுச்சின்னங்களின் புகைப்படங்களும், நியூயார்க்கில் உள்ள சோத்பீ என்று இடத்தில் ஏலம் விடப்படுகிறது. சந்திரனிலிருந்து ஆம்ஸ்ட்ராங் தரையிரங்கிய நாளான வரும் ஜுலை 20ம் தேதி இந்த ஏலம் நடைபெறுகிறது. இந்த அரிய பொருட்கள் 2 மில்லியன் டாலர் முதல் 4 மில்லியன் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.