ஆறு கேமராக்கள்.. மடக்கக்கூடிய வசதி.. சாம்சங் கலக்கல்

ஆறு கேமராக்கள்.. மடக்கக்கூடிய வசதி.. சாம்சங் கலக்கல்
ஆறு கேமராக்கள்.. மடக்கக்கூடிய வசதி.. சாம்சங் கலக்கல்
Published on

சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையிலான புதிய வகை ஸ்மார்ட்ஃபோனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

செல்ஃபோன் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம், அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற கேலக்ஸி ‘அன்பேக்கெட் 2019’ விழாவில், சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இன்ஃபினிடி ஃப்ளெக்ஸ் டிஸ்பிளே திறனுடன், 4.6 அங்குல தொடுதிரையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் விரித்தால் 7.3 அங்குலமாக மாறும் திறன்கொண்டது.

12 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்நல் மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனை, தேவைப்படும்போது மடித்துக்கொள்ளலாம். இந்த மொபைல் போனில் மொத்தம் 6 சென்சார் கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. முன்புறத்தில் 3 கேமராக்களும், பின்புறத்தில் மூன்று கேமராக்களும், வீடியோ காலிங் கேமரா வசதிகளும் உள்ளது. கேலக்ஸி ஃபோல்ட் போனில் மொத்தம் இரண்டு பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை 4,380 எம்.ஏ.எச் பேட்டரி திறனை கொண்டதாகும். ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.

பச்சை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் வெளிவந்துள்ள இந்த போன், 4ஜி எல்இடி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த கேலக்ஸி ஃபோல்ட் போனின், விலை இந்திய மதிப்பில் ரூ.1.41 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com