மொபைல் சந்தையில் ஜாம்பவனாக திகழும் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சான்பிராஸ்சிகோவில் நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் மாநாட்டில் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் ஜஸ்டின் டெனிசன், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் திறந்த நிலையில் 7.3 இன்ச் டிஸ்பிளேவில் டேப்லெட் போன்று பயன்படுத்த கூடியது.
மடங்கிய நிலையில் 4.58 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனாக பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒஎல்இடீ (OLED) பேனல் வசதியில் உருவாக்கப்பட்ட இந்த போனை ஸ்மார்ட்போனாகவும், டேப்லெட்டாகவும் பயன்படுத்தலாம். இரண்டு சிம்கார்டு வசதி, 512 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் வசதி என சமீபத்திய தொழில்நுட்பங்களும் இந்த மொபைல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1 லட்சத்து 10 ஆயிரமாக இருக்கும் என கூறப்படுகிறது.