ப்ளாக்ஷிப் கில்லர் மாடலாக விளங்கும் சாம்சங் கேலக்ஸி S8 மாடல் ரூ.4000 வரை சந்தை விலை குறைக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த மொத்த விற்பனை மையம் மஹேஷ் டெலிகாம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி மாடல்களில், 6GB RAM உடன், 128GB உள்ளடக்கிய மொபைல் ரூ. 74,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மும்பை மஹேஷ் டெலிகாம் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பக்கத்தில் ரூ.4090 வரை விலை குறைக்கப்பட்டு ரூ.70,900 என விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் Exynos 8895 பிராசஸருடன் இணைந்து செயல்படும் 4GB RAM, 64GB மற்றும் 128GB வரையிலான சேமிப்பு வசதியுடன், 12 மெகாபிக்சல் ட்யூவல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன், முன்புறத்தில் செல்ஃபி ஃபோட்டாக்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது. இரு மாடல்களிலும் HD 4K வீடியோ பதிவுசெய்யும் திறன் பெற்றது. பேட்டரி திறனில் சாம்சங் கேலக்ஸி S8 மொபைலில் 3500mAh திறன் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
குறைக்கப்பட்ட புதிய விலையில், மொத்த விற்பனை கடைகளில் கேலக்ஸி S8 விற்பனைக்கு கிடைக்கிறது. ஆன்லைன் போர்ட்டல்களான அமேசான், ஃப்ளிப்கார்ட்டில் விரைவில் இந்த விலைகுறைப்பு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.