காகித பயன்பாட்டை குறைக்க எஸ் பென் மற்றும் ஸ்க்ரீன் ஆஃப் மெமோயுடன் களம் இறங்குகிறது, சாம்சங் நோட் 8.
சாம்சங் நிறுவனத்தின் நோட் 8 மொபைல் இன்று டெல்லியில் அறிமுகமாகிறது. இதற்கான நிகழ்ச்சி இன்று மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைலின் அடுத்த மாடலாக இந்த மொபைல் அமைகிறது.
இதன் சிறப்பம்சங்கள்:
இந்த மொபைலில் எக்ஸ்னோஸ் பிராசெஸர், 6.3 இன்ச் டிஸ்ப்ளே 521 பிக்ஸ்ல், 6ஜிபி ரேம், 4G VoLTE, 3300mAh பேட்டரி, இரண்டு 12MP பின்புற கேமரா, 8MP செல்ஃபி கேமரா ஆகிய வசதிகளுடன் 256ஜிபி, 128ஜிபி மற்றும் 64ஜிபி ரேம் கொண்ட மூன்று வேரியண்ட்கள் இந்த மொபைலுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இவை தவிர, எஸ் பென் மற்றும் ஸ்க்ரீன் ஆஃப் மெமோ ஆகிய வசதிகள் இந்த மொபைலின் சிறப்பு அம்சம். மொபைல் ஸ்லீப் மோடில் இருக்கும்போது எஸ் பென் மூலம் கையெழுத்துக் குறிப்புகளை மொபைலிலேயே எழுதி சேமிக்கலாம்.
ஐபோன் 8 மொபைலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கூறப்படும் ஹோம் பட்டன் நீக்கம், இன்ஃபினிட் டிஸ்ப்ளே எனப்படும் அகன்ற திரை மூலம் சாம்சங் நோட் 8 மொபைலிலும் இடம்பெற்றுள்ளது.