உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஜியோமி நிறுவனம், இந்தியாவில் இன்று பகல் 12 மணி முதல் ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி 9 ஸ்மார்ட் போன்களின் விற்பனை ஆன்லைனில் ஆரம்பமாக உள்ளதாக அறிவித்துள்ளது.
பட்ஜட் ரக போனாக இந்த ஸ்மார்ட்போன்களை ஜியோமி நிறுவனம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அமேசான் மற்றும் MI.காம் வழியாக இந்த போன்களை ஆன்லைனில் வாங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 9 பிரைம்
மூன்று வண்ணங்களில் கிடைக்கும் ரெட்மி 9 போனின் பேஸிக் மாடல் 9,999 ரூபாய் முதல் விற்பனையாக உள்ளது. இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும்128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ள போன் 11,999 ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியர் சைடில் நான்கு கேமிரா, 5020 மில்லியாம்ப் பேட்டரி திறன், 18 வாட்ஸ், பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஃபுள் ஹெச்.டி டிஸ்பிளேவில் 9 பிரைம் வெளியாக உள்ளது.
ரெட்மி 9
8,999 ரூபாய்க்கு விற்பனையாகும் ரெட்மி 9 போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன் 9,999 ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது.
ரியர் சைடில் இரண்டு கேமிரா, 5000 மில்லியாம்ப் பேட்டரி திறன், 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளது.