ரோட்ஸ்டர் வகை இமாலயன் 450 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் Guerrilla 450 பைக்கானது, ஆற்றல்மிக்க எஞ்சின், டைனமிக் சேஸ் மற்றும் ரைடிங் மோடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய புதிய கெரில்லா 450 பைக்கின் ஆரம்ப விலையை ரூ.2.39 லட்சமாக நிர்ணயித்து ஜூலை 17 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். இதற்கான முன்பதிவு டெஸ்ட் டிரைவுடன் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கும் என்ஃபீல்டு நிறுவனம், விற்பனையானது ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் என தெரிவித்துள்ளது.
* புதிய வகை கெரில்லா 450 பைக்கானது இமாலயன் 450 பிளாட்பார்மை பயன்படுத்தி பெறப்பட்ட முதல் மோட்டார் சைக்கிள் ஆகும் மற்றும் ஒரு சக்திவாய்ந்த என்ஜினுடன் டைனமிக் சேஸ் மற்றும் ரைடிங் மோடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
* 4-வால்வு DOHC அமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த மோட்டார் சைக்கிள், 8000 RPM-ல் 40 PS மற்றும் 5,500 RPM-ல் 40 NM என உச்ச முறுக்குவிசையை வழங்குகிறது, இந்த முறுக்குவிசையில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமாக 3000 RPM ரேஞ்சிலிருந்து கிடைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
ரெவ் வரம்பில் 40PS மற்றும் 40Nm வழங்குவதால், கெரில்லா 450 ஒரு தைரியமான மற்றும் உற்சாகமான ரோட்ஸ்டர் என்று வாகன உற்பத்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* லாட்டின் அமெரிக்க சந்தைகளில் ’ராயல் என்ஃபீல்டு GRR 450’ என அழைக்கப்படும் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 வகையானது, “அனலாக், டாஷ் மற்றும் ஃப்ளாஷ்” என மூன்று வகைகளிலும், 5 வண்ணங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
* கெரில்லா 450 பைக்கானது புதிய 452CC சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு ஷெர்பா எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது "ஆர்வமுள்ள மற்றும் உற்சாகமான ரோட்ஸ்டர் செயல்திறனுக்காக" வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெரில்லா 450 பைக் குறித்து பேசியிருக்கும் ஈச்சர் மோட்டார்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சித்தார்த்த லால், "கெரில்லா 450 என்பது நவீன ரோஸ்டர்ஸுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதில் முயற்சித்தோம், அது தற்போது எப்படி வந்திருக்கிறது என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது இமயமலையின் அதே பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது, ஆனால் ரோட்ஸ்டரின் செயல்திறனுடன் டியூன் செய்யப்பட்டுள்ளது, நீங்கள் பைக்ரைட் செய்யும் போது வித்தியாசமான உணர்வை பெறுவீர்கள். உண்மையான ரோட்ஸ்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கெரில்லா 450 உண்மையில் வெளிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.