750 விஞ்ஞானிகளின் 18வருட கனவு.. விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!

மறு பயன்பாட்டு ஏவுகள சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது.
RLV LEX - ISRO
RLV LEX - ISROISRO
Published on

செய்தியாளர் - பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்ச்சில் ‘புஷ்பக்’ என பெயரிடப்பட்டுள்ள ஏவுகலத்தை 300 கிலோமீட்டர் வேகத்தில் இறக்கி பேராசூட் மூலம் வேகத்தை கட்டுப்படுத்தி இஸ்ரோ சாதனை படைந்துள்ளது.

RLV LEX - ISRO
‘இதனால்தான் கோலியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை’ - முக்கியமான காரணத்தை பகிர்ந்த முன்னாள் வீரர்!

மறு பயன்பாட்டு ஏவுகள சோதனை என்றால் என்ன?

பொதுவாக செயற்கைக்கோள்களையோ விண்கலன்களையோ மேலே அனுப்பும்போது ராக்கெட் மூலமாக வளிமண்டலத்திற்கு மேலே அனுப்பிவிட்டு, ராக்கெட் பாகங்கள் ஒவ்வொன்றாக கடலில் விழுந்துவிடும்.

இந்நிலையில் அனுப்பப்படும் ராக்கெட்டை வளிமண்டலத்தில் நிலை நிறுத்திய பின்னர் மீண்டும் ராக்கெட்டை பூமிக்கு கொண்டு வரும் தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துவருகின்றனர். இது மறு பயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம் என கூறப்படுகிறது.

எப்படி பூமியின் ஈர்ப்பு விசையான 9.81 நியூட்டன் / மீட்டர் என்பதை தாண்டி வளிமண்டலத்திற்கு செல்வது எவ்வளவு கடினமோ, அதேபோன்று மீண்டும் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி பூமியில் பத்திரமாக தரவிறங்குவதும் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய ஸ்பேஸ் யூனியன் போன்ற நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பம் குறித்தான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் எலான் மஸ்கின் ஸ்பேசிக்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

RLV LEX - ISRO
இப்படி ஒரு விதியா? ’ஹிட் விக்கெட் + ரன்அவுட்’ 2 முறை அவுட்டாகியும் NOTOUT கொடுக்கப்பட்ட பேட்ஸ்மேன்!

18 வருட கனவு திட்டம்!

2006ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவால் மறு பயன்பாட்டு ராக்கெட் என்கிற கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் இரண்டு சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று விண்வெளியில் இருந்து திரும்பும் போது வாகனத்தின் வடிவமைப்பு இயக்கம் தொடர்பான சோதனை நடத்தப்பட்டது. கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் இன்று காலை 7:10 மணிக்கு சோதனை நடத்தப்பட்டது.

‘புஷ்பக்' என்று பெயரிடப்பட்ட ஏவுகலம் இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கி.மீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. 4.5 கிமீ தொலைவில் இருந்து ஓடுபாதையை கண்டறிந்து துல்லியமாக கிடைமட்டத்தில் தரையிறங்கியது.

புஷ்பக் விமானம் இன்று காலை 7:10 மணிக்கு 320 கிமீ வேகத்தில் தரை இறங்கியது. டச் டவுனுக்குப் பிறகு, வாகனத்தின் வேகம் அதன் பிரேக் பாராசூட்டைப் பயன்படுத்தி மணிக்கு 100 கிமீ வேகத்தில் குறைக்கப்பட்டது, அதன்பிறகு தரையிறங்கும் கியர் பிரேக்குகள் வேகத்தைக் குறைப்பதற்கும் ஓடுபாதையில் நிறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன. இந்த செயல்பாடுகள் அனைத்தும் தானியங்கியாக செய்யப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

RLV LEX - ISRO
0 தோல்வி.. வரிசையாக 6 வெற்றி! இருப்பினும் தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் SA! வில்லனாக மாறிய WI!

750 விஞ்ஞானிகளின் உழைப்புக்கு கிடைத்த பலன்!

புஷ்பக் ஏவுகலத்தில் இனெர்ஷியல் சென்சார், ரேடார் அல்டிமீட்டர், ஃப்ளஷ் ஏர் டேட்டா சிஸ்டம், சூடோலைட் சிஸ்டம் மற்றும் NavIC போன்ற சென்சார்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளும் பரிசோனையில் மதிப்பிடப்பட்டது.

ஏற்கனவே இரண்டு முறை மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறு பயன்பாட்டு ஏவுகலம் சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக இன்றும் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் வாழ்த்து தெரிவித்தார்.

சுமார் 750 விஞ்ஞானிகள் இஸ்ரோவின் மறுபயன்பாட்டு ராக்கெட் திட்டத்தில் 2006 லிருந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய மதிப்பில் சுமார் 137 கோடி செலவில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுகளில் மறு பயன்பாட்டு ஏவுகலம் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

RLV LEX - ISRO
‘உறவெல்லாம் ஒன்றாக..விழியெல்லாம் தேனாக’ விஜய்-பவதாரணி குரலில் மனதை வருடும் சின்ன சின்ன கண்கள் பாடல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com