இறைச்சியைத் தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாமாம்... நம்பிக்கை தரும் ஆய்வு

இறைச்சியைத் தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாமாம்... நம்பிக்கை தரும் ஆய்வு
இறைச்சியைத் தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலைத் தடுக்கலாமாம்... நம்பிக்கை தரும் ஆய்வு
Published on

இறைச்சி உணவு வகைகள் உட்கொள்வதை தவிர்த்தாலே புவி வெப்பமயமாதலை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து 4 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைந்து மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வு, மாட்டிறைச்சிக்கு பதிலாக பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகைளை உண்பதால் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG)அளவை குறைக்கும் என தெரிவிக்கிறது. ஒரு வேளை அமெரிக்கர்கள் தொடர்ந்து இறைச்சியை விட பீன்ஸ் உண்டால் 2020ம் ஆண்டுக்குள் 50 முதல் 75 சதவிகிதம் வெப்பமயமாதல் குறைவதை உணர முடியும் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.

வெப்பமயமாதலை குறைக்க ஆட்டோமொபைல் சாதனங்களை குறைப்பது அல்லது அதன் உற்பத்தியை நிறுத்தவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் இதன் மூலமாகவே எளிதாக வெப்பமயமாவதை குறைக்கலாம் எனவும் அந்த ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் மக்கள் இறைச்சியை வாங்க ஆர்வம் காட்டும் அளவுக்கு காய்கறிகளை வாங்க மறுக்கின்றனர். பசுமை இல்ல வாயு அளவைக் குறைக்க உணவு வகைகளை மாற்றுவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com