ரிலையன்ஸ் ஜியோ 4ஜி-யின் இலவச சேவைகள், 'சம்மர் சர்ப்ரைஸ்', 'தன் தனா தன்' திட்டங்கள் விரைவில் முடிய இருப்பதால் ஜியோ தன்னுடைய அதிரடியை ஜியோஃபை மூலம் தொடங்கியுள்ளது.
ஜியோஃபை 4ஜி ரூட்டர் கருவியை ரூ.1999 கட்டணத்தில் வாங்கும்போது, வாடிக்கையாளர்கள் ப்ரைம் ரீசார்ஜ் ரூ.99 மற்றும் முதல் மாதம் ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் சிறப்பு கூடுதல் டேட்டாவை வழங்குகிறது ஜியோ. இதற்கு ரூ.149, ரூ.309, ரூ.509 ஆகிய மூன்று டேட்டா திட்டங்களில் மட்டுமே வழங்குகிறது. 149 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும், புதிய ஜியோ ஃபை வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா உடன் கூடுதலாக மாதம் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு அடுத்த 12 மாதங்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்.
ரூ. 309 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினசரி 1 ஜிபி என்ற விகிதத்தில் 28 ஜிபி வழங்கப்படும், ஆனால் புதிய ஜியோஃபை வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு 168 ஜிபியை வழங்குகிறது ஜியோ. ரூ.509 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி என்ற விகிதத்தில் 28 ஜிபி வழங்கப்படும். ஆனால் புதிய ஜியோஃபை வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களுக்கு 224 ஜிபியை வழங்குகிறது ஜியோ.
224 ஜிபி டேட்டாவை தினசரி 2 ஜிபி என, மொத்தமாகப் பெறுவதற்கு 4 மாதங்களுக்கு பெறுவதற்கு, ஜியோஃபை விலை ரூ.1999, பிரைம் ரீசார்ஜ் ரூ.99 மற்றும் முதல் ரீசார்ஜ் ரூ.509 என மொத்தமாக ரூ.2607 செலுத்த வேண்டியிருக்கும்.