ரெட்மீ நோட் 4, முதல் காலாண்டில் அதிகம் விற்பனையாகியுள்ளதாக, சந்தை ஆய்வு நிறுவனமான, சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக, சீன தயாரிப்பான ஜியோமியும் தொடர்ந்து அசராமல் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியபடி இருக்கின்றன.
சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் என்னும் சந்தை ஆய்வு நிறுவன ஆய்வின் அடிப்படையில், இந்த காலாண்டில் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ரெட் மீ நோட் 4, அதிகம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், 2016-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் அதிகம் விற்பனையான சாம்சங் கேலக்சி J2-இன் இடத்தை ரெட்மீ நோட் 4 பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ ரெட் மீ நோட் 6, கடந்த மாதம் வெளிவந்தபோது, நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.