ஜியோமி நிறுவனமானது ரெட்மி வரிசையில் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை கிரிஸ்டல் கிளாஸ் டிசைன் மற்றும் புதிய பியூச்சர்களோடு அறிமுகம் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த மொபைல் போன் ஜியோமி பயனாளர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. இதன் ஐகானாக திஷா பட்டானியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெட்மி 12 வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஜியோமி, “ ஜியோமி ரசிகர்களே நீங்கள் கேட்டதும், உங்கள் விருப்பத்திற்குரியதுமான ரெட்மி 12 ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது புதுமையான பியூச்சர்கள் மற்றும் கிரிஸ்டல் கிளாஸ் டிசைனுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*1080x2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.79-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
*ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் மூலம் 8GB வரை ரேம் அனுமதிக்கப்படுகிறது.
* 4GB/8GB ரேம் உடன் 128GB மற்றும் 256GB என இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது. மேலும் எஸ்டி கார்ட் மூலம் சேமிப்பை நீட்டித்து கொள்ளலாம்.
*ரெட்மி 12 ஸ்மார்ட் போன் 13 இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும் இது நிறுவனத்தின் சொந்த லேயரான MIUI 14 உடன் முதலிடத்தில் உள்ளது.
*f/1.8 துளை கொண்ட 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு முன்புறத்தில் 8MP ஷூட்டர் உள்ளது.
*18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
*இணைப்பு விருப்பங்களில் 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத், GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.
விலையை பொறுத்தவரையில் கடந்த மாதம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட ரெட்மி 12, மிட்நைட் பிளாக், போலார் சில்வர் மற்றும் ஸ்கை ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது 4GB/128GB மாடலுக்கு தோராயமாக ரூ.17,000 ஆரம்ப விலை வைக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்தில், 8GB/128GB மாடலின் விலையானது தோராயமாக ரூ. 12,500 என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ரெட்மி 12 4GB/128GB மாடலானது ரூ.12,000 தோராய விலையிலும், 8GB/256GB மாடலானது ரூ.17,000 என்ற தோராய விலையிலும் அறிமுகமாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.