சூரியனைச் சுற்றும் கோள்களிலேயே மிகவும் கவர்ந்திழுக்கக்கூடிய வகையில், சிவப்பு நிறத்தில் இருப்பது செவ்வாய் கிரகம்.
சூரியனில் இருந்து நான்காவதாக இருப்பது இந்த செவ்வாய் கிரகம். துருபிடித்த நிறத்திலான இரும்பு தாதுகளை கொண்டிருக்கும் பல்வேறு பாறைகளும், சிவப்பு பழுப்பு நிறத்திலான பாலைவனமும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. இப்படி செவ்வாய் கிரகத்தின் 70 சதவீத மேற்பரப்பு சிவப்பு நிறத்திலேயே காட்சியளிக்கிறது. இங்கு அடிக்கடி ஏற்படும் புயல், மேற்பரப்பில் இருக்கும் சிவப்பு மாசை வளிமண்டலத்தில் நிரப்பிவிடும். செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதினால், வளிமண்டலத்தில் காணப்படும் இந்த மாசுத் துகள்கள் நீண்ட நாட்களுக்கு அப்படியே பரவியிருக்கும். இதனாலேயே செவ்வாய் கோள் சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது. சூரிய குடும்பத்தில் இருக்கும் கோள்களில், வெள்ளிக்கு அடுத்தாற்போல் செவ்வாய் கிரகம் பிரகாசமாக காட்சியளிக்கிறது.