தினசரி ஒரு மில்லியன்.. X தளத்திலிருந்து வெளியேறி Blueskyயில் இணையும் பயனர்கள்.. காரணம் இதுதான்!

டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய நண்பரும், அவரது வெற்றிக்கு உழைத்தவருமான எலான் மஸ்குக்குச் சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இருந்து பயனர்கள் விலகுவது அதிகரித்துள்ளது.
x and bluesky social pages
x and bluesky social pagesx page
Published on

எக்ஸ்தளத்திலிருந்து ப்ளூஸ்கை தளத்திற்கு மாறும் பயனர்கள்

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தம்முடைய ஆட்சியில் யார் யாருக்கு அவர் பங்கும் அதிகாரமும் கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம், அவருடைய பாதுகாப்பு குறித்த விஷயங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டொனால்டு ட்ரம்பின் நெருங்கிய நண்பரும், அவரது வெற்றிக்கு உழைத்தவருமான எலான் மஸ்குக்குச் சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இருந்து பயனர்கள் விலகுவது அதிகரித்துள்ளது. அவர்கள் ப்ளூஸ்கை (Bluesky) மற்றும் த்ரெட்ஸ் (Threads) போன்ற தளங்களில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்படி, Bluesky தளத்தில், தினசரி ஒரு மில்லியன் புதிய பயனர்கள் இணைவதாகவும், தற்போதுவரை, அந்தச் ​​சமூக தளத்தில் 16.7 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மில்லியன் பயனர்கள் இருந்தனர்.

எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறுவதற்கு என்ன காரணம்?

பிரேசிலில் எக்ஸை தற்காலிகமாக இடைநிறுத்திய சம்பவத்திற்குப் பிறகு, பல்லாயிரக்கணக்கான பிரேசிலியர்கள் ப்ளூஸ்கையை மாற்று தளமாக பயன்படுத்தத் தொடங்கினர். தவறான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சு போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி பயனர்கள் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எலான் மஸ்க்கின் ஆதரவும், அவரது நிர்வாகத்தில் அவர் எதிர்பார்த்த ஈடுபாடும் கிடைத்திருப்பதால், பல பயனர்களை மாற்று வழிகளைத் தேடத் தூண்டியுள்ளது. பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’கூட எக்ஸ் தளத்தில் இனி எதுவும் பதிவு செய்ய விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இலங்கை: தமிழர்களின் வாக்குகளை கைப்பற்றி சாதித்த ஆளும்கட்சி.. சாத்தியமானது எப்படி? வைகோ கடும் கண்டனம்

x and bluesky social pages
X தளத்தில் இருந்து விலகிய ‘The Guardian’ | அதிகரிக்கும் விலகல்கள்..தொழிலில் கோட்டை விடுகிறாரா மஸ்க்!

ப்ளூஸ்கை தளத்தின் செயல்பாடுகள் என்ன?

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த 2022-ல் வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டண வசூல் வரையில் அதை சொல்லலாம். ட்விட்டரின் பெயரையும் ’எக்ஸ்’ என அவர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறியவர்களால் அதற்குப் போட்டியாக, புளூஸ்கை முதன்முதலில் தொடங்கப்பட்டது. எக்ஸ் (ட்விட்டர்) தளத்தின் முன்னாள் தலைவரான ஜாக் டோர்சி இத்தளத்தை நிறுவினார். என்றாலும் நடப்பு மே மாதம் அதிலிருந்து விலகினார். தற்போது, இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜே கிராபர் உள்ளார். இது, பயனர்களுக்காக தொடங்கப்பட்ட சமூக ஊடகச் சேவையாகும்.

இதில் பயனர்கள் 300 எழுத்துகள் மற்றும் படங்களைக் கொண்ட குறுகிய செய்திகளை பதிவிடலாம். ப்ளூஸ்கை சமூக வலைப்பின்னலானது மாஸ்டோடன் (Mastodon) போன்ற ஒரு பரவலாக்கப்பட்ட கட்டமைப்பில் இயங்குகிறது. இது பயனர்கள் சுயாதீனமான சமூக ஊடக அனுபவங்களை உருவாக்க அனுமதிக்கிறது. எக்ஸ் தளத்தைப் போன்றே ப்ளூஸ்கையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதிலும் கட்டணச் சேவை அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும், ப்ளூஸ்கை தளத்தை அனைவருக்கும் இலவசமாக வைத்திருப்பதில் அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரு தனியார் Beta-வாக இயங்கிய பிறகு, எக்ஸ் அல்லது திரேட்ஸ் சேவையை விரும்பாத பயனர்களிடையே இது பிரபலமாகிவிட்டது.

ஆனால் எக்ஸ் தளத்திற்கு சவால் விடுவதற்கு இன்னும் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. 2019 முதல் ட்விட்டர் முதலீட்டில் தனி திட்டமாக இயங்கி வந்த Bluesky 2022ஆம் ஆண்டுதான் அதிகாரப்பூர்வ நிறுவனமாக உருவானது. கடந்த ஆண்டு மட்டும் BlueSky சுமார் 13 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எக்ஸ் தளம் தினசரி 250 மில்லியன், செயலில் உள்ள பயனர்களைக் கொண்டிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ப்ளூஸ்கை தளத்திற்கு பயனர்கள் ஒருபுறம் வெளியேறிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு அவருடைய சொத்துக்கள் உச்சத்தைத் தொட்டு வருகிறது.

முன்னதாக, ட்ரம்பின் வெற்றியால், எலான் மஸ்க்கின் திருநங்கை மகள் விவியன் வில்சன், அமெரிக்காவை விட்டு வெளியேறுவதாக தெரிவித்திருந்தது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிக்க: IND Vs SA | ஒரே ஆண்டு.. ஒரே போட்டி.. இந்திய அணி படைத்த மகத்தான 10 சாதனைகள்!

x and bluesky social pages
ட்ரம்ப் வெற்றி | ”அமெரிக்காவில் இருந்து வெளியேறுவேன்”.. எலான் மஸ்க்கின் திருநங்கை மகள் அறிவிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com