ராணிப்பேட்டை: குறைந்த செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்த இளைஞர்கள்

ராணிப்பேட்டை: குறைந்த செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்த இளைஞர்கள்
ராணிப்பேட்டை: குறைந்த செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்த இளைஞர்கள்
Published on

ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை குறைந்த செலவில் தயாரித்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குறிஞ்சிநகர் குடியிருப்பு பகுதியில் நரேஷ், அனிஷ் மேத்யூ. ஆகிய இரு இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இதில், அனிஷ் மேத்யூ பெங்களூருவில் வானியல் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனின் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் நோயாளிகள் சந்திக்கும் சிரமத்தை கருத்தில் கொண்ட அனிஷ் மேத்யூ, வெளிநாடுகளிலிருந்து அதிக செலவில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை குறைக்க, குறைந்த செலவில் உள்நாட்டு பொருட்களைக் கொண்டு ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படி காற்றில் உள்ள 21 சதவீதம் ஆக்சிஜனை ஜியோ லைட் என்ற வேதிப் பொருளை பயன்படுத்தி கம்ப்ரசர் மூலம் தனியாக பிரித்து அதனை ஒரு குடுவையில் சேமித்து வைக்கும் யுக்தியை பயன்படுத்தி, உள்நாட்டு பொருட்களை கொண்டு 40,000 ரூபாயில் செலவில் ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் என்ற வீதத்தில் ஆக்சிஜனை தயாரிக்கும் திறன் படைத்த இயந்திரத்தை தயாரித்துள்ளனர்.

இதன் வெளிநாட்டு இறக்குமதி மதிப்பு 1 முதல் 2 லட்சம் ரூபாய் இருக்கும், குறைவான நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய, தங்களுடைய இந்த இயந்திரத்தை ஆய்வுக்கு உட்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அனுமதி கேட்டு அணிஷ் மற்றும் நரேஷ் மாவட்ட ஆட்சியர் கிளாட்சன் புஷ்பராஜை நேரில் சந்தித்து ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை காட்டி அதன் செயல் முறையை விளக்கினர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்ததோடு, இளைஞர்களின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com