நீருக்கு அடியிலும் வேலை செய்யும் வகையிலான விரல் ரேகை சென்சாரை சிப் தயாரிப்பு நிறுவனமான குவால்கோம் உருவாக்கியுள்ளது.
செல்போன்களில் பயன்படுத்தப்படும் சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள குவால்கோம் நிறுவனம், அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் புதியவகை விரல் ரேகை சென்சார்களை வடிவமைத்துள்ளது. இந்தவகை சென்சார்கள் கண்ணாடி, உலோகம் ஆகியவற்றின் அடியில் பொருத்தினாலும் சிறப்பாக செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை சென்சார்களின் சிறப்பம்சமே நீருக்கு அடியிலும் இது வேலை செய்யும் என்பதே. நீர் உட்புகாத வண்ணம் வாட்டர் ஃப்ரூப் தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், குவால்கோம் நிறுவனத்தின் இந்த புதிய வகை சென்சார்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பில் முக்கிய அம்சமாகக் கருதப்படும் விரல் ரேகை சென்சார்கள் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் முனைப்பு காட்டி வரும் நிலையில், குவால்கோம் நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.