மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் கூகுள் ப்ளே மற்றும் அப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து ‘பப்ஜி’ கேம் இன்னும் நீக்கப்படவில்லை.
இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களை கொண்ட கேம் செயலி ‘பப்ஜி’. இந்த கேமிற்கு அதிதீவிர பிரியர்களாக இந்திய இளைஞர்கள் உள்ளனர். இந்த கேம் ஆல் பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்றும் மத்திய தொழில்துறை அமைச்சகம் ‘பப்ஜி’ உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. பாதுகாப்பு நலன் கருதியும், இந்திய இறையான்மைக்கு எதிராக இருப்பதாகவும் மத்திய அரசு விளக்கமளித்தது.
தடை செய்யப்பட்டு ஒருநாள் ஆகியும் ‘பப்ஜி’ கேம் இன்னும் கூகுள் ப்ளே மற்றும் அப் ஸ்டோர் ஆகிய செயலிகள் பதிவிறக்க தளங்களில் இருந்து இன்னும் நீக்கப்படவில்லை. இதனால் பப்ஜி இன்னும் பதவிறக்கம் செய்யக்கூடிய வகையிலும், விளையாடக் கூடிய வகையிலும் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து 69ஏ சட்டப்படி பப்ஜிக்கு தடை அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் அது கூகுள் ப்ளே மற்றும் அப் ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.